இன்றைய நவீன வாழ்வு நமக்கு அளித்துள்ள பெரும் வசதிகளில் ஒன்று புகைப்படங்கள். பிலிம் ரோல்களைப் பயன்படுத்தி, படம் எடுத்து, சில மாதங்கள் கழித்து, நிறைய பணம் செலவழித்து அவற்றை அச்சடித்து பார்த்து மகிழ்ந்த காலங்கள் இனிய நினைவுகளாகி விட்டன.
திறம்மிக்க DSLR முதல் Point & Shoot அல்லது கைபேசிக்காமிரா வரை அவரவர் வசதிக்கேற்ற கருவிகளில் இன்று படம் எடுத்து மகிழ்கிறோம். உடனுக்குடன் பார்க்கும் வசதி, கருவிகளிலேயே மெருகேற்றும், திருத்தும் வசதி, இணையத்தில் பகிரும் வசதி என மன்னர்களுக்குக் கூட இல்லாத வசதிகள் இன்று சாமானியருக்கும் கிடைக்கின்றன.
நாம் உண்ணும் உணவு, பார்க்கும் இடங்கள், நண்பர்கள் என அனைத்தையும் சுட்டுத் தள்ளி விடுகிறோம். Facebook, Flickr, Instagram, 500px, snapchat எனப் பல தளங்களில் பகிர்ந்து Like களுக்காகத் தவம் இருக்கிறோம்.
இவ்வாறு நாம் எடுக்கும் புகைப்படங்களை, பிறர் தமது வலைப்பதிவுகளிலோ, நூல், மின்னூல்களிலோ பயன்படுத்த அனுமதிக்கிறோமா?
பெரும்பாலோர் அனுமதிப்பதில்லை. © Copyright என்று அறிவித்து விட்டு, படங்களின் மறுபயன்பாட்டைத் தடுத்து விடுகிறோம்.
இவ்வாறு அனுமதி மறுப்பதால் பலவகையான இழப்புகள் ஏற்படுகின்றன. சில உதாரணங்களைக் காண்போம்.
திரு.சகாயம் IAS அவர்களைப் பற்றி ஒரு மின்னூல் உருவாக்கத் திட்டமிட்டு இருந்தோம். அவர் படங்களை இணையத்தில் தேடினால், காப்புரிமை கொண்ட படங்கள் மட்டுமே கிடைக்கின்றன. search.creativecommons.org தளத்தில் பகிரும் உரிமை உள்ள படங்கள் கிடைக்கும். அதில் தேடினால், விக்கிப்பீடியாவில் உள்ள ஒரே ஒரு சின்ன படம் மட்டுமே கிடைக்கிறது.
இதே போல யோகாசனம் பற்றிய மின்னூலுக்கும் போதிய படங்கள் கிடைக்கவில்லை.
இறையன்பு IAS, நடிகர் விஜயகாந்த், பாடகர் SPB, இசைஆனி இளையராஜா போன்றோருக்கும் ஒரு சில படங்கள் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் 200×200 போன்ற சிறிய அளவிலேயே கிடைக்கின்றன. images.google.com ல் தேடினால், எல்லாப் படங்களும் உயர்தரத்தில் கூட கிடைக்கின்றன. ஆனால் அவை காப்புரிமை எனும் விலங்கினால் கட்டப்பட்டுள்ளன. http://www.google.com/advanced_image_search ல் usage rights: free to use or share தந்து தேடிப்பாருங்கள்.
உலகின் அறிவையெல்லாம் கட்டற்ற உரிமையில் தொகுக்கும் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளில் ஏதேனும் படங்களைச் சேர்க்க, அவை Creative Commons Attribution ShareAlike என்ற உரிமையில் இருத்தல் வேண்டும். இந்த உரிமையில் படங்கள் கிடைக்காததால், பெரும்பாலான கட்டுரைகள் படங்கள் இல்லாமலேயே எழுதப் படுகின்றன. இது சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்குப் பெரும் இழப்பு தானே.
சில கேள்விகளும் பதில்களும்
நான் படங்களை இணையத்தில் ஏற்றுவதே பிறர் பகிரத்தானே. ஏன் தனியாக உரிமம் பற்றி சொல்லவேண்டும்?
உரிமம் பற்றி சொல்லாத படங்கள், தாமாகவே காப்புரிமை விலங்கு பெறுகின்றன. பிறர் பகிரவும் பயன்படுத்தவும் விரும்பினால் Creative Commons உரிமையை சொல்ல வேண்டும்.
Creative Commons உரிமை என்றால் என்ன?
உங்கள் படைப்புகளை பிறர் பகிரவும், பயன்படுத்தவும் தரும் அனுமதியே இது. மேலும் அவற்றில் மாறுதல் செய்யலாமா? கூடாதா?, வணிகரீதியில் பயன்படுத்தலாமா? கூடாதா? என்றும் வரையறுக்கலாம். இதற்கேற்ப பின்வரும் 6 உரிமைகள் உள்ளன.
பிறர் உங்கள் படைப்புகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் பெயரை கட்டாயம் சொல்லியாகவேண்டும். எனவே படைப்புத் திருட்டு பற்றி பயப்படவேண்டாம்.
சிலர் எனது படங்களைத் திருடி, தம் பெயரில் வெளியிட்டால் என்ன செய்வது?
சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கலாம். அந்தந்த நாட்டு சட்டங்களை இந்த creative commons உரிமைகள் ஆதரிக்கின்றன.
இணையத்தில் திருட்டைத் தடுக்க இயலாது. ஆனால் 100% விதிகளுக்கு உட்பட்டே பகிரவிரும்பும் நண்பர்களுக்கு உங்கள் படைப்புகள் உதவட்டுமே. உங்கள் படங்கள் விக்கிப்பீடியா பக்கங்களிலும், பல வலைப்பதிவுகள், நூல்கள், மின்னூல்களில் உங்கள் பெயருடன் பகிரப்படுவது மகிழ்ச்சிதானே.
எப்படி creative commons படங்களைத் தேடுவது?
search.creativecommons.org
https://www.flickr.com/creativecommons/
images.google.com போன்றவற்றில் பகிரும் உரிமை கொண்ட படங்களைத் தேடலாம்.
சரி, நான் என்ன செய்ய வேண்டும்?
* உங்கள் படங்களை commons.wikimedia.org ல் பதிவேற்றுங்கள்.
* Flickr ல் உரிமைப் பகுதியில் creativecommons தெரிவு செய்யுங்கள்
http://www.wikihow.com/Apply-the-Creative-Commons-License-to-Flickr-Photographs
* Google+ images ல் உரிமைப் பகுதியில் creativecommons தெரிவு செய்யுங்கள்
http://www.stevegillphotos.co.uk/2012/03/using-creative-commons-license-on.html
இவ்வாறு பகிர்வதால் உங்கள் பெயரும் படங்களும் பரவுவதோடு, வணிகவாய்ப்புகளும் கிடைக்கும்.
உலக அளவில் புகழ் பெற்ற காட்டுயிர் புகைப்படக்கலைஞர், கல்யாண் வர்மா, தம் படங்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுவதால் பெறும் பலன்களை TED உரையில் விளக்கும் காணொளி இதோ.
http://www.inktalks.com/discover/117/kalyan-varma-free-art-is-profitable
உங்கள் புகைப்படங்களும் சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்பட அனுமதியுங்கள். பகிர்தலை ஆதரியுங்கள்.
ஐயங்களுக்கு தயங்காமல் எழுதுக.
••••••••
மலைகள் இதழ் 81 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=7205

No comments:
Post a Comment