Wednesday, December 16, 2015

தமிழக அரசியல்வாதிகளின் விவரங்கள் தொகுப்பது எப்படி?

தமிழக அரசியல்வாதிகளின் பட்டியல், அவர்களது பின்னணி, வரலாறு போன்றவை இணையத்தில் உள்ளதா? இல்லையெனில் தொகுத்தால் பயன் உண்டா?

எப்படி அரசியல்வாதிகளின் விவரங்களைத் திரட்டுவது?

மந்திரி முதல் கவுன்சிலர் வரையிலான தகவல்களைத் திரட்டி வெளியிட வேண்டும்.


தேர்தல் நேரத்தில் சில பத்திரிக்கைகளில் மொத்த அரசியல்வாதிகளின் தகவல்கள், வரலாறுகளை வெளியிடுவர். எப்படி அவர்களுக்கு மட்டும் இது சாத்தியமாகிறது?

என்று இணையத்தில் கேட்டிருந்தேன்.

கிடைத்த பதில்கள்களை இங்கே தொகுக்கிறேன்.

---
தேமொழி 

தற்பொழுது ஆட்சியில் உள்ளவர்கள் தகவல் கிடைக்குமிடம் >>> http://www.tn.gov.in/


- Governor <http://www.tn.gov.in/government/keycontact/197>
- Chief Minister <http://www.tn.gov.in/government/keycontact/18358>
- Council of Ministers <http://www.tn.gov.in/ministerslist>
- MPs & MLAs <http://www.tn.gov.in/government/mps>
- Departments <http://www.tn.gov.in/department>
- Districts <http://www.tn.gov.in/district_view>

http://www.tn.gov.in/government/mps

இப்பக்கத்தில்

Lok Sabha <http://www.tn.gov.in/government/loksaba> | Rajya Sabha
<http://www.tn.gov.in/government/rajyasaba>

MLAs <http://www.tn.gov.in/government/mlas>
Lok Sabha <http://www.tn.gov.in/government/loksaba> | Rajya Sabha
<http://www.tn.gov.in/government/rajyasaba> | MLAs
<http://www.tn.gov.in/government/mlas>

என ஒவ்வொரு சுட்டியையும் சொடுக்கி, கிடைக்கும் உறுப்பினர்
பெயர்களையும் சொடுக்கினால் அனைவர் பட்டியலும், அவர்களது தகவல்களும்
கிடைக்கும்.
ஜோதிஜி திருப்பூர்
http://www.vikatan.com/news/special/manthiri-thanthiri/ 

அரும்பானவன்
http://affidavitarchive.nic.in/  தங்களுக்கு தேவையான அரசியல்வாதிகளின் அப்பிடவிட் என்று சொல்ல
கூடிய சொத்து விபரங்கள் இருக்கிறது... 

Saturday, November 21, 2015

கைபேசிப் பயன்பாட்டைக் குறைத்தல்


இப்போதெல்லாம் செல்பேசியின் பயன்பாடு பெருமளவு பெருகி, மிக அதிக நேரத்தைக் களவாடுவதை உணர்கிறேன். 

நான் செல்பேசியுடன் செலவழிக்கும் நேரத்தைக் கணக்கிட, Quality Time என்ற செயலியை நிறுவினேன்.

கடந்த வார புள்ளிவிவரங்கள் இதோ.

ஒரு வாரத்தில் 33 மணி நேரங்கள் செல்பேசியுடன்.

செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலில் நிறைய இருந்தாலும் அவற்றுக்கு நேரமின்றி, அவற்றை செய்யாமல் ஒத்திப்போட்டு, செல்பேசிக்கு மட்டும் இவ்வளவு நேரம் செலவழிப்பது சரியல்லை.

இணையத்தின் பயன்பாட்டையும் செல்பேசி பயன்பாட்டையும் பெருமளவு குறைக்க முடிவு செய்துள்ளேன்.

புத்தகங்கள், இசை, நடனம், உரையாடல், செய்ய விரும்பும் வேலைகள், எழுத்து என நேரங்களை நிரப்ப எண்ணுகிறேன்.

நீங்களும் Quality Time போன்ற ஒரு மென்பொருளை நிறுவி, உங்கள் செல்பேசி பயன்பாட்டைக் கணக்கிடுங்கள். 

 

 

 

 

Thursday, October 08, 2015

கனவுகளைத் துரத்துபவன் - த.சுரேஷ் B.E, B.L

"அண்ணா,  ஒரு வழியா +2 முடித்துவிட்டேன்."
"மகிழ்ச்சி தம்பி, அடுத்து என்ன செய்யப் போகிறாய்?"

"சட்டக் கல்லூரி செல்ல ஆசை."
"அடடா. அது வேணாமே. நீ BE படிக்கலாமே."

"எனக்குப் பிடித்ததைத் தானே படிக்க முடியும்? "
"ஆனால், சட்டப்படிப்பு வேண்டாமே. "

"வேறு என்ன படிப்பது?"
"நீ BE படித்தால், வீட்டில் அனைவரும் மகிழ்வோம்."

"உங்கள் மகிழ்ச்சிக்காக வேண்டுமானால் BE படிக்கிறேன். ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை."

சில ஆண்டுகளுக்கு முன், எனக்கும் என் தம்பி சுரேஷுக்கும் நடந்த உரையாடல் இது. அவன்  BE சேர்ந்ததில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. அவனைத் தவிர.

காலப்போக்கில் சரியாகி விடும் என்று நினைத்தோம். அவனுக்கு படிப்பதில் பெரிதாக ஆர்வம் இல்லை. தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினாலும் தேர்ச்சி பெற்று விடுவான். ரொம்ப ஆர்வமுடன் படித்தாலும் மதிப்பெண்களும் அறிவும் வேறுதானே. அதனால் அதைப்பற்றி நாங்கள் கவலைப் படவில்லை.

அவன் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. எதிலுமே ஆர்வம் காட்டாமல் ஒரு வெறுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான்.

"எதையாவது பிடித்து செய்டா தம்பி. விளையாடு, சினிமா பார், ஊர் சுற்று. படிப்பில்தான் ஆர்வமில்லை. வேறு எதிலாவது ஆர்வம் காட்டலாமே. உனக்கு எதுதான் பிடிக்கும்?"

"எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை. என்னை வற்புறுத்தாதே அண்ணா."


BE யும் முடிந்தது. அவனால் நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்பட்ட அவன் துறை சார்ந்த நுட்பமான கேள்விகளுக்குக் கூட பதில் சொல்ல இயலவில்லை. அவன் எதிர் காலம் என்ன ஆகுமோ என்று பயந்தேன்.

ஒருவழியாக துறை சார்ந்த நிறுவனத்தில் சேர்ந்தான். ஒரே மாதத்தில் பிடிக்கவில்லை என்று நின்றுவிட்டான்.

'அப்பாடா. ஏதோ ஒன்று பிடிக்கவில்லை என்று சொல்லுமளவுக்காவது இருக்கிறானே! ' என்று மகிழ்ந்தேன்.

அவனுக்கு லினக்ஸ் ஓரளவு தெரியும். கணியம் இதழில் கட்டுரைகள் எழுதியிருக்கிறான். தனியாக வலைத்தளத்திலும் எழுதி வந்தான். ஒரு கணிணி  நிறுவத்தில் சேர்ந்தான். அங்கும் இரு வாரங்கள் தான்.

அவனுக்கு நிரலாக்கம் (Programming) சொல்லித்தர முயன்ற என் நண்பர்கள் தோல்வி அடைந்து வருந்தினர்.

திடீரென ஒருநாள், "நான் சட்டக்கல்வி படிக்கப் போகிறேன்" என்றான்.

"என்ன இது புதுக் குழப்பம்? ஏற்கெனவே நீ BE. பிறகு ஏன் BL? "

"BE உங்களுக்காகப் படித்தேன். அப்போதே BL சேர அனுமதி கேட்டேன். யாரும் அனுமதிக்கவில்லை. இப்போதாவது அனுமதி தாருங்களேன். நீ மட்டும் உனக்குப் பிடித்த லினக்ஸ் வழியில்தான் வாழ்வேன் என உறுதியோடு இருக்கிறாயே. அருளும் அவனுக்குப் பிடித்தவாறு IIT யில் படிக்கிறான்.  எனக்குப் பிடித்த துறையில் நானும் சாதிக்க விரும்புகிறேன்.  சட்டக்கல்வி எனக்கு சிறு வயதிலிருந்து இருக்கும் கனவு. கனவை மெய்யாக்குவதை விட சிறந்த வாழ்க்கை உண்டா என்ன?"

பெரும் தவறு செய்து விட்டதை உணர்ந்து வருந்தினேன்.

"மன்னித்து விடடா தம்பி. நீ உனது விருப்பப்படியே செய். உனக்குப் பிடித்த வாழ்க்கையை மட்டுமே வாழு. உன் கனவுகளைத் துரத்தி, அவற்றை நனவாக்கு. இத்தனை காலம் எங்களுக்காக பொறுத்திருந்தது போதும். தனக்கு எது பிடித்திருக்கிறது என்று கண்டுபிடிப்பது தான் ஒவ்வொருவருக்கும் உள்ள பெரிய சவால். அதைக் கண்டுபிடித்தால் போதும். அதை நோக்கிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே வாழ்வின் பயன். உன் கனவுகள் யாவும் நனவாகட்டும். பல்லாயிரம் வாழ்த்துக்கள்."


வீட்டில் அனைவரின் பெரும் மகிழ்ச்சியுடனும் ஆதரவுடனும் BL சேர்ந்தான்.

அவன் கண்களில் பெரு மகிழ்ச்சியை பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டேன். இது அவனுக்கு மறுபிறப்பு போல. மகிழ்ச்சியான கல்லூரி நாட்களை கொண்டாடத் தொடங்கினான்.
இங்கும் அவன் வகுப்பில் முதல் மாணவன் அல்ல. ஆனால், மகிழ்ச்சியான இளைஞன். நண்பர்கள், விளையாட்டு, இசை, சினிமா, பயணங்கள், புத்தக வாசிப்பு என ஒவ்வொரு நாளையும் அவன் கொண்டாடுவது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இனிமேல் என் கருத்துகளை யாருக்கும் திணிக்க மாட்டேன் என்று உறுதி கொண்டேன்.

சட்டக் கல்வியும் முடிந்தது.

த.சுரேஷ் B.E, B.Lhttps://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpl1/t31.0-8/s960x960/11230240_10207256244461033_5974127519944362604_o.jpg

இதோ இன்னும் சில மணி நேரங்களில் சென்னை Bar council ல் வழக்கறிஞராகப் பதிவு செய்யப் போகிறான். 

டெல்லியில் இருந்து இதைக் கொண்டாட இன்னொரு தம்பி அருளாளன் வந்துள்ளான். அப்பா, அம்மா, அருள், சுரேஷ், நண்பர்கள் சங்கர், மோகன், சத்யராஜ், மேலும் பல உறவுகள், நட்புகளோடு சென்னை சென்று இந்த பதிவு நிகழ்வை கொண்டாடப் போகின்றனர்.
வெகு தூரத்தில், இங்கிலாந்தில் நான் இருந்தாலும் மனமெல்லாம் உன்னை வாழ்த்திக் கொண்டே இருக்கிறது சுரேஷ்.

கனவுகள் நிறைவேறுவதை விட பெருமகிழ்ச்சி ஏதுமிருக்காது. இந்தக் கனவுகளை நனவாக்கும் விளையாட்டை உன்னிடமிருந்தே கற்றேன். எனக்கான கனவுகளையும் நனவாக்கிக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் பெரிதாகக் கனவுகள் காண். அவற்றைத் துரத்தித் துரத்தி நனவாக்கு.

   
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

இந்த இரு குறள்களுக்கும் உதாரணமாய் வாழும் உன் செயல்கள் யாவும் மனித குலம் முழுமைக்கும் உதவுதாக இருக்கட்டும். [   இது என் ஆசை. மற்றபடி உனக்குப் பிடித்ததையே செய்வாயாக. ;-)  ]

வாழ்த்துக்கள்.
Tuesday, September 29, 2015

கூகுளின் இலவச எழுத்துணரியை எளிதாக்க ஒரு கட்டற்ற மென்பொருள்


சமீபத்தில் தமிழர்களின் நெடுநாள் கனவான OCR, எழுத்துணரியை கூகுள் இலவசமாக
வெளியிட்டுள்ளது. Google Drive ல் ஒரு படத்தை ஏற்றி, அதை Google Doc ஆகத்
திறந்தால் OCR செய்யப்பட்டு, படமும் அதற்கான உரையும் கிடைக்கிறது. தமிழ்
உள்ளிட்ட 200 மொழிகளில் கிடைக்கிறது.


இதற்கான செய்முறை இதோ.
http://www.thewindowsclub.com/google-drive-convert-image-to…

Google Drive இல் 2MB இற்கு குறைவான படக்கோப்பினை தரவேற்றம் செய்யுங்கள்
.பின்னர் அந்த கோப்பில் வலது கிளிக் செய்து Google Doc ஊடாக திறந்தால்
அது சொற்கோப்பாக மாறிவிடும்.

ஒரு பெரிய நூலின் ஒவ்வொரு படமாக ஏற்றி, அதை OCR செய்து உரையாக மாற்றி
சேமிப்பது கடினம். அதை தானியக்கமாகச் செய்ய ஒரு மென்பொருள்
உருவாக்கியுள்ளேன். லினக்ஸ் இயங்குதளத்தில் பைதான் மொழியில் எழுதினேன்.
கட்டற்ற மென்பொருளான இதன் மூலநிரலை இங்கே பதிவிறக்கலாம்.
https://github.com/tshrinivasan/google-ocr-python

https://www.youtube.com/watch?v=PH9TnD67oj4
இந்தக் காணொளியில் கூகுள் எழுத்துணரியைக் கொண்டு ஒரு முழு PDF கோப்பை
தானியகமாக உரையாக மாற்றும் நிரலைப் பயன்படுத்தும் முறையை
விளக்கியுள்ளேன்.

இதனை மேம்படுத்தவும், பிற இயக்குதளங்களுக்கு மாற்றவும் விரும்புவோர்
செய்து கொள்ளலாம்.

Sunday, September 13, 2015

கல்வெட்டு ஆய்வு மென்பொருள் உருவாக்க உதவி தேவை

என் நண்பர் பிரியதர்சினி கோவையில் ME கணிணியியல் படிக்கிறார்.
[ priyadarshiniathreya84@gmail.com ]

தமது திட்ட ஆய்வுப்பணியாக  கல்வெட்டு எழுத்துகளை கணிணியில் இட்டு, உணரச் செய்து தானியக்கமாக கல்வெட்டுகளின் காலத்தைக் கணிக்கும் வகையில் ஒரு மென்பொருள் செய்ய விரும்புகிறார்.

கல்வெட்டியல் அவருக்கு மிகவும் புதிது.

இது பற்றி எங்கு இணையத்தில் எங்கு படிக்கலாம்?
கல்வெட்டியல் பற்றி மின்னூல்கள், வலைப்பதிவுகள் இருந்தால் தெரிவிக்கவும்.

கல்வெட்டுகளின் படங்களும் அதிக அளவில் தேவை. அவற்றை எங்கு பெறலாம்?

இதே போல மென்பொருள் உருவாக்க யாரேனும் முயன்று கொண்டிருந்தால் இணைந்து செயல்படலாம்.

மென்பொருள் உருவாக்கத்தில் நானும் இணைகிறேன்.

மிக்க நன்றி.

Saturday, May 09, 2015

தேர்வு முடிவுகள், கல்வியில் மாற்றங்கள் பற்றிய இணைய உரையாடல்கள்

தேர்வு முடிவுகள், கல்வியில் மாற்றங்கள் பற்றிய இணைய உரையாடல்களை தொகுத்து மின்னூலாக்க விரும்புகிறேன்.

முகநூல், வலைப்பதிவுகளின் இணைப்பு தருக.

எனது தேடல் முடிவுகள் இங்கே.

http://tamil.thehindu.com/opinion/columns/நம்-கல்வி-நம்-உரிமை-அஜிதனும்-அரசுப்-பள்ளியும்/article7145697.ece
http://tamil.thehindu.com/opinion/columns/நம்-கல்வி-நம்-உரிமை-ஜெயமோகன்களாலேயே-அஜிதன்கள்-உருவாகிறார்கள்/article7157441.ece
https://www.facebook.com/mayavarathaan/posts/10205694016583351?fref=nf
https://www.facebook.com/sivakumar.asokan.9/posts/630259910439580?fref=nf
https://www.facebook.com/photo.php?fbid=703913589639720&set=a.272060919491658.69030.100000632559754&type=1
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=91672
https://www.facebook.com/pu.ko.saravanan/posts/941439349220475
https://www.facebook.com/pu.ko.saravanan/posts/571925669505180?fref=nf
http://www.vinavu.com/2015/05/08/education-society-and-struggle/
http://www.vinavu.com/2015/02/18/matriculation-schools-true-successors-of-macaulay/
https://www.facebook.com/WriterRavikumar/posts/10152726855842062
https://www.facebook.com/pandiarajantnsf/posts/794067847347526
https://www.facebook.com/asiriyar.kural/posts/597788950342101
https://www.facebook.com/WriterRavikumar/posts/10152726960217062
http://nanjilnadan.com/2015/03/16/கைம்மண்அளவு4/
https://www.facebook.com/photo.php?fbid=767142750073386&set=a.139495922838075.26149.100003330057623&type=1
http://tamil.thehindu.com/opinion/columns/article6194177.ece#.U75saFHna5w.gmail
http://tamil.thehindu.com/tamilnadu/அரசுப்-பள்ளி-மாணவர்களால்-தமிழ்-வளர்கிறது-சகாயம்-ஐஏஎஸ்-பெருமிதம்/article6949043.ece
http://balacartoons.blogspot.in/2013/06/blog-post_5292.html
http://tamil.thehindu.com/opinion/columns/அரசுப்-பள்ளி-ஆசிரியர்கள்-தம்-பிள்ளைகளைத்-தனியார்-பள்ளிகளில்-சேர்ப்பது-வெட்கக்கேடு-இமையம்-பேட்டி/article6149288.ece
https://www.facebook.com/kathir.bangalore.3/posts/1597732610462500
https://www.facebook.com/manikandanTNSF/posts/787141974652308?fref=nf
https://www.facebook.com/anbalaganfb/posts/10152191333948303
https://www.facebook.com/groups/worldtamilengineerscircle/permalink/256402717708298/
https://www.facebook.com/photo.php?fbid=578216238966039&set=a.578216232299373.1073741852.100003330057623&type=1&fref=nf
https://www.facebook.com/permalink.php?story_fbid=854866151226003&id=720391591340127
https://www.facebook.com/pachai.nakkeeran/posts/550693481628934
http://www.vikatan.com/news/article.php?module=news&aid=29993
http://thittivaasal.blogspot.co.uk/2013/07/blog-post_21.htmlhttps://www.facebook.com/permalink.php?story_fbid=982760428401146&id=100000015930586&fref=nf


இன்னும் பல பேர் கல்வி பற்றி எழுதியிருக்கலாம்.
அவற்றைத் தொகுத்தால், கல்வியின் மீதான புது விவாதங்களும், மாற்றங்களும் ஏற்படலாம்.

Sunday, April 26, 2015

பெயர்ச்சொற்கள் தொகுப்பு உருவாக்கலாம், வாங்க !

வணக்கம்.
தமிழில் கட்டற்ற மென்பொருளாக சொல்திருத்தி, இயந்திர மொழிபெயர்ப்பு ஆகியன செய்ய முதல் படியாக, பெயர்ச்சொற்களைத் தொகுக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம்.

முதல் பணியாக peyar.in தளத்தில் உள்ள குழந்தைப் பெயர்களைத் தொகுத்துள்ளேன்.
பட்டியலை இங்கே காணலாம்.
https://github.com/tshrinivasan/tamil-nouns

இதே போல, ஊர்ப்பெயர்கள், தாவரங்கள், விலங்குகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தொழிற்பெயர்கள் போன்றவற்றை சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த பெரிய பட்டியலை வளர்க்க உங்கள் அனைவரின் உதவியும் தேவை.

ஆர்வமுள்ளோர், உங்களுக்குத் தெரிந்த பெயர்ச்சொற்களை, வகை வாரியாகப் பிரித்து, ஒரு உரை ஆவணத்தில் எழுதி எனக்கு ( tshrinivasan@gmail.com ) அனுப்ப வேண்டுகிறேன்.

மிக்க நன்றி.

Thursday, April 23, 2015

5000 படங்களை விக்கிப்பீடியாவிற்கு அளித்த பங்களிப்பாளருக்கு புகைப்படக்கருவி வாங்க நன்கொடை தேவைபடம் மூலம் -


ஏற்காட்டில் உள்ள மத்திய தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் திரு. ஏற்காடு இளங்கோ அவர்கள் கால் நூற்றாண்டிற்கும் மேலாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் இதுவரை எழுதியுள்ள 70 க்கும் அதிகமான நூல்களில், 65 நூல்கள் அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல் தொடர்புடைய நூல்களாகும். இந்நூல்கள் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, கல்வியாளர்கள், நோபல் பரிசு பெற்ற பெண்கள், சர்வதேச தினங்கள் குறித்த தகவல் போன்றவற்றை வழங்குபவை. விழிப்புணர்வு தரும் அறிவியல் நூல்கள் மக்களை சென்றடையவேண்டும் என்ற நோக்கில் தனது அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல்கள் நூல்களுக்கு காப்புரிமையை நீக்கி இணையம் வழி பலரும் தரவிறக்கி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இலவச மின்நூல்களாக வெளியிட்டு வருகிறார்.

http://freetamilebooks.com/authors/ஏற்காடு-இளங்கோ/
இங்கு இதுவரை வெளியான 17 மின்னூல்களையும் இலவசமாகப் பெறலாம்.இவர் தற்போது, ஏற்காடு மலைகளில் உள்ள பல்வேறு தாவரங்களை படம் எடுத்து, விக்கிமீடியா காமன்ஸ் எனும் தளத்தில் பதிவேற்றி வருகிறார்.
விக்கிபீடியாவின் துணைத்திட்டமான https://commons.wikimedia.org ல் உள்ள படங்களை யாவரும் எந்த வகையிலும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
[மூலம் - படத்தின் இணைய முகவரி] என்று சொன்னால் போதும்.

இந்த தளத்தில் சுமார் 5000 படங்களை ஏற்றியுள்ளார் திரு. ஏற்காடு இளங்கோ.
தாவரங்களின் அறிவியல் பெயர் மற்றும் பிற விவரங்களையும் சேர்த்து வருகிறார்.
இவை தாவரவியல் ஆராய்ச்சிக்கு பெரிதும் பயன்படுவன.


இவரின் புகைப்படப் பங்களிப்புகள் - https://commons.wikimedia.org/wiki/Category:Files_by_User:Yercaud-elango

பிற விவரங்கள் -
https://ta.wikipedia.org/s/3pgz
http://www.vallamai.com/?p=53227


இவரது புகைப்படப் பங்களிப்புகளுக்கு இன்னும் சிறப்பு செய்ய, திறம் மிகு புகைப்படக்கருவி தேவைப்படுகிறது.

அவரது வேண்டுகோள் இதோ.

====================================

வணக்கம். நான் இதுவரை 5000புகைப்படங்களை விக்கிமீடியாவில் இணைத்துள்ளேன். இதில்  தாவர இனங்களின் புகைப்படங்கள்,  விலங்குகள், வண்ணத்துப் பூச்சிகள்,  ஏற்காடு சுற்றுலா தளங்கள் என இணைத்துள்ளேன்.

தாவரங்களின் பெயர்களை அடையாளம் கண்டுபிடித்து அதற்கு தாவரவியல் பெயரிடுவது மிகவும் சிரமம். சுமார் 30 நிமிடம் முதல் சில நாட்கள், சில மாதங்கள் கூட ஆகும். அலுவலக வேலை, தமிழ்நாடு அறிவியல் இயக்க பணிகள், அறிவியல் புத்தகம் எழுதும் பணி என பல வேலைகளுக்கு இடையே இப்பணியை நவம்பர் 22, 2014 முதல் செய்து வருகிறேன்.

தாவரம், மரம் போன்றவற்றை புகைப்படம் எடுக்க ஏற்காடு மலையில் 50 கி.மீ. தூரம் வரை செல்ல வேண்டும். மலையின் மீது ஏற வேண்டும். இது ஆபத்தான வேலை. இருப்பினும் சமூக நோக்கத்துடன் மாணவர் சமூகத்திற்காக, ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவுவதற்காக இப்பணியை செய்து வருகிறேன். 5 ஆண்டுகள்
செய்ய கூடிய பி.எச்.டி., ஆய்வுக்கு இணையான பணியாகும். 75 புத்தகங்களை எழுதி முடித்து விட்டு, எழுத்துப் பணியையும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

இத்துடன் தாவரங்களின் படங்களை எடுத்து இணைக்கும் பணியிலும் ஈடுபடுகிறேன். மரத்தின் உச்சியில் உள்ள பூக்களை படம் எடுக்க வேண்டி இருக்கிறது. ஒரு அதி நவீன கேமரா இருந்தால் மரங்களின் உச்சியில் உள்ள பூக்களை படம் எடுக்க முடியும். மேலும் ஏற்காட்டில் வாழும் பறவைகள், விலங்குகளையும் புகைப்படம் எடுத்து விக்கிமீடியாவில் இணைக்க முடியும். சமூக நோக்கத்துடன் எதிர்கால மாணவர் சமூகத்திற்காக செய்ய இருக்கும் இப்பணிக்கு 25க்கும் மேற்பட்ட Mega Pixel மற்றும் 30 x Zoom கொண்ட கேமரா வாங்கிக் கொடுத்தால் பணி சிறப்பாக அமையும்.


ஏற்காடு இளங்கோ

yercaudelango@gmail.com


====================================

இவ்வாறு ஏற்காடு மற்றும் தமிழகத்தின் பிற காடுகளின் தாவரங்களை புகைப்படம் எடுத்து, வகைப்படுத்தி, ஆவணப்படுத்தும் பெரும்பணி, மற்றொரு முறை எப்போது நடக்கும் என்று தெரியாது. முதல்முறையிலேயே, நல்ல கருவியில் புகைப்படம்
எடுத்துவிட்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அவருடைய புகைப்படக் கருவியும் தற்போது பழுதாகி விட்டது. அவரது பணிகளை ஊக்கப் படுத்தும் வகையிலும், விக்கிப் பீடியாவிற்கு தரமான படங்களை அளிக்க உதவும் வகையிலும்
ஏற்காடு இளங்கோ அவர்களுக்கு, ஒரு நல்ல புகைப்படக்கருவி வாங்கித்தர நன்கொடை வேண்டுகிறேன்.


நன்கொடையின் அளவிற்கேற்ப DSLR அல்லது 30x zoom Point and Shoot புகைப்படக் கருவியை வாங்கலாம்.

கீழுள்ள எனது வங்கிக் கணக்கிற்கு தங்களால் இயன்ற தொகையை அனுப்பினால் போதும்.

அவரது மின்னஞ்சல் முகவரிக்கும், எனது மின்னஞ்சல் முகவரிக்கும் நன்கொடை பற்றி எழுதிடவும் வேண்டுகிறேன்.

yercaudelango@gmail.com  & tshrinivasan@gmail.comவங்கிக் கணக்கு விவரங்கள் -
T Shrinivasan
Account No:
006010101471083
Axis bank
Mylapore Branch
Chennai
IFSC code UTIB0000006
மிக்க நன்றி!Monday, March 30, 2015

சிறுவர் நாடகங்கள் - ஒரு தொகுப்பு


சில நாட்களுக்கு முன்

இணையத்தில் சிறுவர் நாடகங்களின் தேவை 

http://tshrinivasan.blogspot.in/2015/03/blog-post.html

 

என்ற தலைப்பில், சிறுவர் நாடகங்களுக்கான தேவை பற்றி எழுதியிருந்தேன்.

பல மின்னஞ்சல் குழும நண்பர்கள் சில நாடகங்களைத் தேடித் தந்தனர். புதிதாக எழுதித் தருவதாகவும் சொல்லியிருந்தனர்.

இதுவரை, கிடைத்த சிறுவர் நாடகங்களின் இணைப்புகளை இங்கே தொகுக்கிறேன்.


 1. நாடகச்சோலை - நூல் - https://www.dropbox.com/s/ihqs99zln8hbndi/nadakasolai.pdf?dl=0
 2. நாரதரின் சிட்னி விஜயம் - http://unmaiyanavan.blogspot.co.uk/2015/03/blog-post_11.html
 3. தமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்  - http://unmaiyanavan.blogspot.co.uk/2013/11/blog-post_14.html
 4. குரு வழிபாட்டின் மூலம் இறை தேடல் - http://unmaiyanavan.blogspot.com.au/2014/02/blog-post_16.html
 5. ஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்  - http://unmaiyanavan.blogspot.com.au/2014/12/blog-post_8.html
 6. சங்க காலப் பாடல்களும் இந்தக் காலப் பாடல்களும் - ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி  - http://unmaiyanavan.blogspot.com.au/2014/10/blog-post.html
 7. தமிழால் இணைவோம் – சுட்ட பண்ணியரமும், பிஞ்ச பீசாவும் - http://www.vallamai.com/?p=45891
 8. சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள் - http://www.noolaham.net/project/02/120/120.htm
 9. சிறுவர் நாடகம் - தமிழா தமிழா! - http://tamilaram.blogspot.co.uk/2011/05/kids-play.html
 10. சுத்தம் -சிறுவர் நாடகம் - http://vaamukomu.blogspot.co.uk/2015/03/blog-post.html
 11. சாமா வீட்டில் தீபாவளி.....!!!(நாடகம்) - http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17249.html
 12. சைவ நீதி - https://docs.google.com/viewer?a=v&pid=forums&srcid=MDQ3MTE4NTA5MTY2NjkwMTk0NTQBMDYwNDIwMzc5MzEzNjk2Nzg3MTQBV3dZMkRiTEFoU29KATAuMQEBdjI
 13. மொழியின் தேவை - https://docs.google.com/viewer?a=v&pid=forums&srcid=MDQ3MTE4NTA5MTY2NjkwMTk0NTQBMDYwNDIwMzc5MzEzNjk2Nzg3MTQBV3dZMkRiTEFoU29KATAuMgEBdjI


இன்னும் வேறு சிறுவர் நாடகங்கள் கிடைத்தாலும் அனுப்புங்கள், பட்டியலில் சேர்ப்போம்.

நன்றி ! 

Monday, March 09, 2015

தமிழ் கற்பிக்க ஒரு செயலி தேவை
திரு. பொள்ளாச்சி நசன் அவர்கள் தமிழ் கற்பிக்க ஒரு எளிய முறையை உருவாக்கியுள்ளார்.

அவர் கூற்றுப்படி,

"மாணவர்கள் எந்த அகவையினராக இருந்தாலும் சரி, தமிழ் கற்றுக் கொண்டதில் எந்த நிலையினராக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் படிப்பதற்காக ஒதுக்கினால், 30 நாள்களில் யாரை வேண்டுமானாலும் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கக்கூடியவராக, மாற்ற முடியும்."


இங்கிலாந்தில் உள்ள நியூகாசில் கல்விக் கழகத்தினர், http://newcastletamilacademy.uk/
இந்த முறையைப் பின்பற்றி, மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து வருகின்றனர்.
பாரம்பரிய முறையைவிட, இந்த புதிய கல்விமுறை, மாணவர்களுக்கு எளிதாகவும், ஆர்வமூட்டும் வகையிலும் உள்ளதை ஆமோதிக்கின்றனர்.

இம்முறையின் சிறப்புகளை இங்கே காண்க.
http://win.tamilnool.net/sound/sutty.pdf   

32 அட்டைகள் மூலம் மிகமிக எளிய முறையில் தமிழ் கற்பிக்கும் முயற்சி இது.

இந்த 32 அட்டை/பாடங்களை இங்கே பெறலாம்.
http://www.thamizham.net/kal/ttenglish/cards32-u8.htm

இவற்றை இணைய வழியில் ஒலிக்குறிகப்புகளோடும், எழுதும் முறையோடும் இங்கே கற்கலாம்.
http://www.thamizham.net/kal/ttenglish/index-u8.htm
http://win.tamilnool.net/sound/uuu/uuu.htm

இந்த பாடங்களுக்கு இன்னும் சுவையூட்ட, இவற்றை ஆன்டிராய்டு, ஐஓஎஸ் செயலிகளாக மாற்றலாம்.
நிறைய வண்ணங்கள், ஒலிக்குறிப்புகள், பயிற்சிகள், சோதனைகள், அசைவூட்டங்கள் சேர்க்கலாம்.

பெற்றோர்களும், குழந்தைகளும் நவீன தொழில்நுட்கங்கள் வழியே தமிழ் கற்பது மிக இனிமையாக இருக்கும்.

கட்டற்ற / திறமூல மென்பொருட்களாக இந்த செயலிகளை உருவாக்க ஆர்வம் கொண்டோர் tshrinivasan@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புக.


தமிழை அடுத்த தலைழுறைக்கு எடுத்துச் செல்ல, நம்மால் ஆன முயற்சிகளைச் செய்வோமே!

மிக்க நன்றி

Tuesday, March 03, 2015

இணையத்தில் சிறுவர் நாடகங்களின் தேவை


உலகெங்கும் வாழும் தமிழர்கள், அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு செல்ல,
மிகவும் முயற்சி செய்கின்றனர்.

பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள் முழு வீச்சில்
செயல்பட்டு, தமிழ் கற்பித்தல், இசை, பாடல், நாட்டியம் கற்பித்தல்,
நண்பர்களாக, குடும்பங்களாக அடிக்கடி சந்தித்து பேசுதல்,
பாடல், ஆடல், பேச்சுப் போட்டிகள் நடத்துதல்,
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் பண்டிகைகளை இணைந்து கொண்டாடுதல்
என பல்வேறு வகைகளில், தமிழை வாழ வைக்கின்றனர்.

அவ்வப்போது, தமிழ் பிரபலங்களையும் அழைத்து வந்து
இசை, திரையிசை, பட்டிமன்றம், சிறப்புரை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர்.


தமது குழந்தைகளை தமிழ் கற்க ஊக்கப்படுத்தவும்,,
அவர்களின்  திறமையை வெளிக்காட்டவும் , இசை, பாடல், நாட்டியம், நாடகம்
போன்றவற்றில் பயிற்சி தந்து, இது போன்ற நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தச் செய்கின்றனர்.

திரைப் பாடல்களூம், இசையும் இணையத்தில் நிறைய கிடைப்பதால்
அவையே முக்கிய நிகழ்ச்சிகளாக உள்ளன.

ஒரு குழுவாக, பல சிறுவர்களும் இணைந்து, நடிக்கக்கூடிய நாடகங்களுக்கு
பெரும் வரவேற்பு கிடைக்கின்றன.

தமிழ் கற்கும் வாய்ப்பு பெரும்பாலும் வாரத்திற்கு ஓரிரு நாட்களும், ஓரிரு மணி நேரங்களே கிடைக்கும் இந்த குழந்தைகளை, மேடையேறி சிறு வசனங்களை சொல்லச் செய்வதே பெரும் பணியாக இருக்கும்.


இந்தக் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க, சிறுவர் நாடகங்கள் இணையத்தில் கிடைப்பதில்லை.

http://www.noolaham.net/project/02/120/120.htm
http://tamilaram.blogspot.co.uk/2011/05/kids-play.html

இவை இரண்டு மட்டுமே இணையத்தில் உள்ளன.


தமிழ்நாட்டில் மட்டுமே அச்சு நூல்கள் சில கிடைக்கின்றன.
அவை வெளிநாட்டு தமிழர்களை சென்றடைவது கடினமே.

இதனால், வெளிநாட்டு தமிழ் ஆசிரியர்களோ, பெற்றோரோ தான்
நாடகங்களுக்கு மூலக்கரு, வசனங்கள் எழுத வேண்டியுள்ளது.

இது பலருக்கு எளிதான வேலை அல்ல.

இது போன்ற நாடகங்கள் இணையத்தில் உரை வடிவில் கிடைத்தால்,
அவர்கள் எளிதில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இயலும்.

சிறுவர்களுக்கு எழுதும் எழுத்தாளர்கள் அதிகரித்து வரும் இந்த வேளையில்
சிறுவர் நாடங்கங்களையும் எழுத வேண்டுகிறேன்.

புதிதாக எழுத வேண்டியது கூட இல்லை.
ஏற்கெனவே குழந்தைகளுக்காக நிறைய நீதிக் கதைகள்,நகைச்சுவைக் கதைகள்,
தெனாலிராமன், அக்பர், பீர்பல், முல்லா, விக்கிரமாதித்யன், பரமார்த்த குரு போன்ற கதைகள் உள்ளன.


http://chirukathaikal.blogspot.co.uk
http://www.tamilsirukathaigal.com/search/label/Moral%20Story

இங்கு பல சிறுவர் கதைகள் கிடைக்கின்றன.
அவற்றை எளிய சிறு, குறு நாடக வடிவில் எழுதி இணையத்தில் வெளியிட்டாலே போதும்.

அவற்றை உலகெங்கும் உள்ள தமிழர்கள் தேவைக்கேற்றபடி, சிறு மாற்றங்கள் செய்து தம் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செய்வர்.


இதை தமிழ் எழுத்தாளர்களும், வலைப் பதிவர்களும், நட்பு ஊடக எழுத்தாளர்களும்
தனியே எழுதி வலைப் பதிவுகளில் வெளியிடலாம்.
அல்லது ஒரு குழுவாக ஒரு இடத்தில் சந்தித்து, எழுத்துத் திருவிழா நடத்தி,
எழுதி வெளியிடலாம்.

இவ்வாறு எழுதும் அன்பர்கள் தயவுசெய்து வலைப்பதிவில் வெளியிடுங்கள்.
முகநூல், டுவிட்லாங்கரில் எழுதும் எழுத்துக்கள் இணைய தேடுதலில் கிடைப்பதில்லை.

தமிழை அடுத்த தலைழுறைக்கு எடுத்துச் செல்ல, நம்மால் ஆன முயற்சிகளைச் செய்வோமே!

மிக்க நன்றி!

Wednesday, January 21, 2015

மாதொருபாகன் - படிப்பதற்கு ஏற்ற PDF

சமீபத்தில் 'மாதொருபாகன்' இலவச மின்னூலாக இணையத்தில் வெளியிடப்பட்டது.

https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf


‘மாதொருபாகன்’ நூலை மீண்டும் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்கு பெருமாள்முருகனின் ஒப்புதல் வேண்டும். புத்தகத்தை வெளியிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். அவர் எனது 20 ஆண்டு நண்பர். அவரது வார்த்தையை நான் மீறமுடியாது. கையில் இருக்கும் நூல்களை விற்கமாட்டேன். வேண்டுமானால், இந்த புத்தகத்தை யாராவது பக்கம்வாரியாக ஸ்கேன் செய்து இணையத்தில் வெளியிடுங்கள். ஒரு பதிப்பாளராக அதை எதிர்த்து நிச்சயம் வழக்கு போடமாட்டேன். // தி இந்து இலக்கிய விழாவில் காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் பேசியது...

http://tamil.thehindu.com/tamilnadu/கருத்துரிமையை-காப்பாற்ற-தீரத்துடன்-போராடவேண்டும்-இந்து-இலக்கிய-விழாவில்-என்ராம்-வலியுறுத்தல்/article6796519.ece

ஆனால், இந்த PDF ஒரே நேரத்தில் இரு பக்கங்களை காட்டும் வகையில் உள்ளது.
இதனால், கணிணியில் படிக்க, கடினமாக உள்ளது.கணிணியில் படிப்பதற்கு ஏற்ப 'மாதொருபாகன்' PDF கோப்பை ஓரு பைதான் நிரல் மூலம் மாற்றி விட்டேன். 
மாதொருபாகன் - கணிணியில் படிப்பதற்கு ஏற்ற PDF


கிண்டில், நூக் போன்ற 6" திரைக்கருவிகளில் படிக்க - https://dl.dropboxusercontent.com/s/rq9055vw9c2jy1a/MathoruPagan-kindle.pdf

இரு பக்கமாக உள்ள PDF கோப்புகளை ஒரு பக்கமாக மாற்ற உதவும் பைதான் நிரல் இங்கே.
https://gist.github.com/tshrinivasan/23d8e4986cbae49b8a8c#file-split-page-py


A4 PDF ஐ, கிண்டில் போன்ற 6" கருவிகளில் வாசிக்கும் வகையில் வெட்டி சுருக்க உதவும் மென்பொருள் - k2optpdf

http://www.willus.com/k2pdfopt/

6" கருவிகளுக்கு - k2pdfopt

iPadMini கருவிக்கு - k2pdfopt -h 20cm -w 13cm


வாழ்க கட்டற்ற மென்பொருட்கள்.