Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, September 13, 2015

கல்வெட்டு ஆய்வு மென்பொருள் உருவாக்க உதவி தேவை

என் நண்பர் பிரியதர்சினி கோவையில் ME கணிணியியல் படிக்கிறார்.
[ priyadarshiniathreya84@gmail.com ]

தமது திட்ட ஆய்வுப்பணியாக  கல்வெட்டு எழுத்துகளை கணிணியில் இட்டு, உணரச் செய்து தானியக்கமாக கல்வெட்டுகளின் காலத்தைக் கணிக்கும் வகையில் ஒரு மென்பொருள் செய்ய விரும்புகிறார்.

கல்வெட்டியல் அவருக்கு மிகவும் புதிது.

இது பற்றி எங்கு இணையத்தில் எங்கு படிக்கலாம்?
கல்வெட்டியல் பற்றி மின்னூல்கள், வலைப்பதிவுகள் இருந்தால் தெரிவிக்கவும்.

கல்வெட்டுகளின் படங்களும் அதிக அளவில் தேவை. அவற்றை எங்கு பெறலாம்?

இதே போல மென்பொருள் உருவாக்க யாரேனும் முயன்று கொண்டிருந்தால் இணைந்து செயல்படலாம்.

மென்பொருள் உருவாக்கத்தில் நானும் இணைகிறேன்.

மிக்க நன்றி.

Sunday, April 26, 2015

பெயர்ச்சொற்கள் தொகுப்பு உருவாக்கலாம், வாங்க !

வணக்கம்.
தமிழில் கட்டற்ற மென்பொருளாக சொல்திருத்தி, இயந்திர மொழிபெயர்ப்பு ஆகியன செய்ய முதல் படியாக, பெயர்ச்சொற்களைத் தொகுக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம்.

முதல் பணியாக peyar.in தளத்தில் உள்ள குழந்தைப் பெயர்களைத் தொகுத்துள்ளேன்.
பட்டியலை இங்கே காணலாம்.
https://github.com/tshrinivasan/tamil-nouns

இதே போல, ஊர்ப்பெயர்கள், தாவரங்கள், விலங்குகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தொழிற்பெயர்கள் போன்றவற்றை சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த பெரிய பட்டியலை வளர்க்க உங்கள் அனைவரின் உதவியும் தேவை.

ஆர்வமுள்ளோர், உங்களுக்குத் தெரிந்த பெயர்ச்சொற்களை, வகை வாரியாகப் பிரித்து, ஒரு உரை ஆவணத்தில் எழுதி எனக்கு ( tshrinivasan@gmail.com ) அனுப்ப வேண்டுகிறேன்.

மிக்க நன்றி.

Monday, March 30, 2015

சிறுவர் நாடகங்கள் - ஒரு தொகுப்பு


சில நாட்களுக்கு முன்

இணையத்தில் சிறுவர் நாடகங்களின் தேவை 

http://tshrinivasan.blogspot.in/2015/03/blog-post.html

 

என்ற தலைப்பில், சிறுவர் நாடகங்களுக்கான தேவை பற்றி எழுதியிருந்தேன்.

பல மின்னஞ்சல் குழும நண்பர்கள் சில நாடகங்களைத் தேடித் தந்தனர். புதிதாக எழுதித் தருவதாகவும் சொல்லியிருந்தனர்.

இதுவரை, கிடைத்த சிறுவர் நாடகங்களின் இணைப்புகளை இங்கே தொகுக்கிறேன்.


  1. நாடகச்சோலை - நூல் - https://www.dropbox.com/s/ihqs99zln8hbndi/nadakasolai.pdf?dl=0
  2. நாரதரின் சிட்னி விஜயம் - http://unmaiyanavan.blogspot.co.uk/2015/03/blog-post_11.html
  3. தமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்  - http://unmaiyanavan.blogspot.co.uk/2013/11/blog-post_14.html
  4. குரு வழிபாட்டின் மூலம் இறை தேடல் - http://unmaiyanavan.blogspot.com.au/2014/02/blog-post_16.html
  5. ஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்  - http://unmaiyanavan.blogspot.com.au/2014/12/blog-post_8.html
  6. சங்க காலப் பாடல்களும் இந்தக் காலப் பாடல்களும் - ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி  - http://unmaiyanavan.blogspot.com.au/2014/10/blog-post.html
  7. தமிழால் இணைவோம் – சுட்ட பண்ணியரமும், பிஞ்ச பீசாவும் - http://www.vallamai.com/?p=45891
  8. சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள் - http://www.noolaham.net/project/02/120/120.htm
  9. சிறுவர் நாடகம் - தமிழா தமிழா! - http://tamilaram.blogspot.co.uk/2011/05/kids-play.html
  10. சுத்தம் -சிறுவர் நாடகம் - http://vaamukomu.blogspot.co.uk/2015/03/blog-post.html
  11. சாமா வீட்டில் தீபாவளி.....!!!(நாடகம்) - http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17249.html
  12. சைவ நீதி - https://docs.google.com/viewer?a=v&pid=forums&srcid=MDQ3MTE4NTA5MTY2NjkwMTk0NTQBMDYwNDIwMzc5MzEzNjk2Nzg3MTQBV3dZMkRiTEFoU29KATAuMQEBdjI
  13. மொழியின் தேவை - https://docs.google.com/viewer?a=v&pid=forums&srcid=MDQ3MTE4NTA5MTY2NjkwMTk0NTQBMDYwNDIwMzc5MzEzNjk2Nzg3MTQBV3dZMkRiTEFoU29KATAuMgEBdjI


இன்னும் வேறு சிறுவர் நாடகங்கள் கிடைத்தாலும் அனுப்புங்கள், பட்டியலில் சேர்ப்போம்.

நன்றி !



 

Monday, March 09, 2015

தமிழ் கற்பிக்க ஒரு செயலி தேவை




திரு. பொள்ளாச்சி நசன் அவர்கள் தமிழ் கற்பிக்க ஒரு எளிய முறையை உருவாக்கியுள்ளார்.

அவர் கூற்றுப்படி,

"மாணவர்கள் எந்த அகவையினராக இருந்தாலும் சரி, தமிழ் கற்றுக் கொண்டதில் எந்த நிலையினராக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் படிப்பதற்காக ஒதுக்கினால், 30 நாள்களில் யாரை வேண்டுமானாலும் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கக்கூடியவராக, மாற்ற முடியும்."


இங்கிலாந்தில் உள்ள நியூகாசில் கல்விக் கழகத்தினர், http://newcastletamilacademy.uk/
இந்த முறையைப் பின்பற்றி, மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து வருகின்றனர்.
பாரம்பரிய முறையைவிட, இந்த புதிய கல்விமுறை, மாணவர்களுக்கு எளிதாகவும், ஆர்வமூட்டும் வகையிலும் உள்ளதை ஆமோதிக்கின்றனர்.

இம்முறையின் சிறப்புகளை இங்கே காண்க.
http://win.tamilnool.net/sound/sutty.pdf   

32 அட்டைகள் மூலம் மிகமிக எளிய முறையில் தமிழ் கற்பிக்கும் முயற்சி இது.

இந்த 32 அட்டை/பாடங்களை இங்கே பெறலாம்.
http://www.thamizham.net/kal/ttenglish/cards32-u8.htm

இவற்றை இணைய வழியில் ஒலிக்குறிகப்புகளோடும், எழுதும் முறையோடும் இங்கே கற்கலாம்.
http://www.thamizham.net/kal/ttenglish/index-u8.htm
http://win.tamilnool.net/sound/uuu/uuu.htm

இந்த பாடங்களுக்கு இன்னும் சுவையூட்ட, இவற்றை ஆன்டிராய்டு, ஐஓஎஸ் செயலிகளாக மாற்றலாம்.
நிறைய வண்ணங்கள், ஒலிக்குறிப்புகள், பயிற்சிகள், சோதனைகள், அசைவூட்டங்கள் சேர்க்கலாம்.

பெற்றோர்களும், குழந்தைகளும் நவீன தொழில்நுட்கங்கள் வழியே தமிழ் கற்பது மிக இனிமையாக இருக்கும்.

கட்டற்ற / திறமூல மென்பொருட்களாக இந்த செயலிகளை உருவாக்க ஆர்வம் கொண்டோர் tshrinivasan@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புக.


தமிழை அடுத்த தலைழுறைக்கு எடுத்துச் செல்ல, நம்மால் ஆன முயற்சிகளைச் செய்வோமே!

மிக்க நன்றி

Tuesday, March 03, 2015

இணையத்தில் சிறுவர் நாடகங்களின் தேவை


உலகெங்கும் வாழும் தமிழர்கள், அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு செல்ல,
மிகவும் முயற்சி செய்கின்றனர்.

பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள் முழு வீச்சில்
செயல்பட்டு, தமிழ் கற்பித்தல், இசை, பாடல், நாட்டியம் கற்பித்தல்,
நண்பர்களாக, குடும்பங்களாக அடிக்கடி சந்தித்து பேசுதல்,
பாடல், ஆடல், பேச்சுப் போட்டிகள் நடத்துதல்,
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் பண்டிகைகளை இணைந்து கொண்டாடுதல்
என பல்வேறு வகைகளில், தமிழை வாழ வைக்கின்றனர்.

அவ்வப்போது, தமிழ் பிரபலங்களையும் அழைத்து வந்து
இசை, திரையிசை, பட்டிமன்றம், சிறப்புரை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர்.


தமது குழந்தைகளை தமிழ் கற்க ஊக்கப்படுத்தவும்,,
அவர்களின்  திறமையை வெளிக்காட்டவும் , இசை, பாடல், நாட்டியம், நாடகம்
போன்றவற்றில் பயிற்சி தந்து, இது போன்ற நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தச் செய்கின்றனர்.

திரைப் பாடல்களூம், இசையும் இணையத்தில் நிறைய கிடைப்பதால்
அவையே முக்கிய நிகழ்ச்சிகளாக உள்ளன.

ஒரு குழுவாக, பல சிறுவர்களும் இணைந்து, நடிக்கக்கூடிய நாடகங்களுக்கு
பெரும் வரவேற்பு கிடைக்கின்றன.

தமிழ் கற்கும் வாய்ப்பு பெரும்பாலும் வாரத்திற்கு ஓரிரு நாட்களும், ஓரிரு மணி நேரங்களே கிடைக்கும் இந்த குழந்தைகளை, மேடையேறி சிறு வசனங்களை சொல்லச் செய்வதே பெரும் பணியாக இருக்கும்.


இந்தக் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க, சிறுவர் நாடகங்கள் இணையத்தில் கிடைப்பதில்லை.

http://www.noolaham.net/project/02/120/120.htm
http://tamilaram.blogspot.co.uk/2011/05/kids-play.html

இவை இரண்டு மட்டுமே இணையத்தில் உள்ளன.


தமிழ்நாட்டில் மட்டுமே அச்சு நூல்கள் சில கிடைக்கின்றன.
அவை வெளிநாட்டு தமிழர்களை சென்றடைவது கடினமே.

இதனால், வெளிநாட்டு தமிழ் ஆசிரியர்களோ, பெற்றோரோ தான்
நாடகங்களுக்கு மூலக்கரு, வசனங்கள் எழுத வேண்டியுள்ளது.

இது பலருக்கு எளிதான வேலை அல்ல.

இது போன்ற நாடகங்கள் இணையத்தில் உரை வடிவில் கிடைத்தால்,
அவர்கள் எளிதில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இயலும்.

சிறுவர்களுக்கு எழுதும் எழுத்தாளர்கள் அதிகரித்து வரும் இந்த வேளையில்
சிறுவர் நாடங்கங்களையும் எழுத வேண்டுகிறேன்.

புதிதாக எழுத வேண்டியது கூட இல்லை.
ஏற்கெனவே குழந்தைகளுக்காக நிறைய நீதிக் கதைகள்,நகைச்சுவைக் கதைகள்,
தெனாலிராமன், அக்பர், பீர்பல், முல்லா, விக்கிரமாதித்யன், பரமார்த்த குரு போன்ற கதைகள் உள்ளன.


http://chirukathaikal.blogspot.co.uk
http://www.tamilsirukathaigal.com/search/label/Moral%20Story

இங்கு பல சிறுவர் கதைகள் கிடைக்கின்றன.
அவற்றை எளிய சிறு, குறு நாடக வடிவில் எழுதி இணையத்தில் வெளியிட்டாலே போதும்.

அவற்றை உலகெங்கும் உள்ள தமிழர்கள் தேவைக்கேற்றபடி, சிறு மாற்றங்கள் செய்து தம் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செய்வர்.


இதை தமிழ் எழுத்தாளர்களும், வலைப் பதிவர்களும், நட்பு ஊடக எழுத்தாளர்களும்
தனியே எழுதி வலைப் பதிவுகளில் வெளியிடலாம்.
அல்லது ஒரு குழுவாக ஒரு இடத்தில் சந்தித்து, எழுத்துத் திருவிழா நடத்தி,
எழுதி வெளியிடலாம்.

இவ்வாறு எழுதும் அன்பர்கள் தயவுசெய்து வலைப்பதிவில் வெளியிடுங்கள்.
முகநூல், டுவிட்லாங்கரில் எழுதும் எழுத்துக்கள் இணைய தேடுதலில் கிடைப்பதில்லை.

தமிழை அடுத்த தலைழுறைக்கு எடுத்துச் செல்ல, நம்மால் ஆன முயற்சிகளைச் செய்வோமே!

மிக்க நன்றி!

Sunday, November 16, 2014

நளாஸ் ஆப்பக்கடையில் தமிழில் உணவுப் பட்டியல் கேட்டு கோரிக்கை


இன்று நளாஸ் ஆப்பக்கடையில் சாப்பிடச் சென்றோம். அங்கு எங்குமே தமிழ் காணப்படவில்லை. எங்கும் ஆங்கிலம் மட்டுமே. உணவுப் பட்டியல் உட்பட.

அங்குருந்த 'பார்வையாளர் குறுப்பேட்டில்' கோரிக்கை விடுத்துள்ளேன்.

தமிழில் உணவுப் பட்டியல் கேட்டு நான் எழுதிய கோரிக்கை.
இது போல நீங்களும் கேட்கலாமே.



உணவுப் பட்டியல் தமிழில் எப்போது அச்சிட்டு வெளியிடுவார்கள் என்று தெரியவில்லை.



ஏன் தமிழில் பட்டியல் இல்லை என்று அங்கிருந்த பணியாளரிடம் பேசியபோது,
'இதுவரை வெகு சிலரே கேட்டுள்ளனர்.  ஆனால் பலரும் கேட்டால் நிச்சயம் செய்வோம்.' என்றார்.


நான் கேட்கத் தொடங்கிவிட்டேன். இனி எங்கும் தமிழில் தகவல்கள் கேட்பேன்.

நீங்களும் கேட்டுப் பாருங்களேன். பெரும் மாற்றங்கள் நம்மைப் போன்ற சாதாரண மனிதரிடமிருந்துதானே துவங்கும்.

Wednesday, May 21, 2014

பேராசிரியர் அரங்க இராமலிங்கம் - தமிழ் வளர்ச்சி மன்றம் - விழா

வணக்கம்.
      தமிழ் வளர்ச்சி மன்றத்தின் 60 ஆவது ஆண்டு விழா மற்றும் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 200 ஆம் ஆண்டு விழா ஆகிய இருவிழாக்களும் 22-05-2014 அன்று மாலை 5. 00 மணிக்கு வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
      தாங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம்.
     
அழைப்பு இணைக்கப்பெற்றுள்ளது.
 
முனைவர் அரங்க இராமலிங்கம்
                   எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.                                                                            
பேராசிரியர் & தலைவர்
தமிழ் மொழித்துறை
மெரினா வளாகம்,  
சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னை - 600 005
 
 
 

Monday, May 12, 2014

வியன்

எமது குட்டி இளவரசனுக்கு 'வியன்' என்று நற்றமிழில் பெயர் சூட்டியுள்ளோம். வியப்பானவன், பரந்த மனம் கொண்டவன் என்று பொருள்.

கதிர், நன்னன், புகழ், நிலவன், முகில், வெற்றி, நற்கோ, வளவன், அகரன், கவின், மாலன், செழியன், இனியன், பாரி, எழிலன் - யோசித்த பிற பெயர்கள்.

peyar.in தளம் வெகு உதவியாக இருந்தது.

சிறப்பான பெயர்களை அறிமுகம் செய்த CR செல்வகுமார் ஐயாவிற்கும் நண்பர் பொற்கோ அவர்களுக்கும் நன்றிகள்.

Wednesday, October 02, 2013

கும்பகோணம் - அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

கும்பகோணம் - அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்
விக்கிப்பீடியா பயிலரங்கம்

கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில்
ஈடுபாட்டை ஏற்படுத்துதல், தமிழ் விக்கிப்பீடியா குறித்த செய்முறை
விளக்கம் அளித்தல், ஐயங்களைதல் என்னும் நோக்கத்திற்காக,
கும்பகோணத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ள கோயிலாச்சேரியில்,
காட்சித்தொடர்பியல் துறையின் சார்பில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்,
இக்கல்லூரியின் கருத்தரங்கக்கூடத்தில்
11.10.2013 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நிகழ உள்ளது.

இந்நிகழ்வில் முதலாமாண்டு மாணவர் அருள் பிரான்சிஸ் வரவேற்புரை
நிகழ்த்தவும், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.ச.
மணி சிறப்புரை நிகழ்த்தவும், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களில் கல்லூரி
மாணவர்களின் பங்கேற்பு குறித்த தலைமையுரையை சேலம், பெரியார் பல்கலைக்கழக
இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி
நிகழ்த்தவும், முதலாமாண்டு மாணவர் ப.சிவராமன் நன்றியுரை நிகழ்த்தவும்
உள்ளனர்.

இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா
திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி
அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ்
மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ்
ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை
இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள்,
காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில்
இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்படும்.

இந்நிகழ்வில், பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 9047655025, 9750933101 ஆகிய
எண்களில் தங்களின் பெயரைப் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம்.