Showing posts with label கட்டற்ற மென்பொருள். Show all posts
Showing posts with label கட்டற்ற மென்பொருள். Show all posts

Thursday, August 22, 2019

தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா - 2 – ஆகஸ்டு 24 – சென்னை



நீங்கள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா?

தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா?

பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை சந்திக்க வேண்டுமா?

இதோ ஒரு வாய்ப்பு.

தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா

நாள் – ஏப்ரல் 24, 2019, சனி
நேரம் – காலை 10.00 – மாலை 5.00

இடம் –
பயிலகம்,
மென்பொருள் பயிற்சி நிறுவனம்,
7, விஜயா நகர் முதல் முதன்மை சாலை,
வேளச்சேரி,
பூங்காவுக்கு எதிரில்
சென்னை 600042

தொடர்புக்கு - 8344777333 | 8883775533 | 044 22592370

Payilagam Software Training Institute
No: 7,
Vijaya Nagar 1st Main Road,
Velachery,
Opposite to Park,
Chennai-600042.
8344777333 | 8883775533
Email: info@payilagam.com
Phone: 044 22592370
www.payilagam.com

தொடர்பு – த.சீனிவாசன் – 98417 9546 எட்டு
tshrinivasan@gmail.com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி,

உங்கள் வருகையை உறுதி செய்க.
நீங்கள் பங்களிக்க, நிறைய திட்டங்கள் காத்துள்ளன.

சில பட்டியல் இங்கே.

https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/labels/Programming


உங்கள் சொந்த யோசனைகளையும் நிரலாக்கம் செய்யலாம்.

நிரலாக்கம் மட்டுமின்றி, இங்குள்ள நூல்களுக்கு அட்டைப்படம் உருவாக்கம், மின்னூலாக்கம் செய்தல்,
https://github.com/KaniyamFoundation/Ebooks/issues

இங்குள்ள சென்னை இடங்களை தமிழாக்கம் செய்தல்
https://github.com/KaniyamFoundation/osm_tamil_translations/issues

ஆகிய பிற பணிகளைக்கும் பங்களிக்கலாம்.

வாருங்கள். கட்டற்ற நிரலால் தமிழுக்கு வளமை சேர்ப்போம்

Sunday, April 26, 2015

பெயர்ச்சொற்கள் தொகுப்பு உருவாக்கலாம், வாங்க !

வணக்கம்.
தமிழில் கட்டற்ற மென்பொருளாக சொல்திருத்தி, இயந்திர மொழிபெயர்ப்பு ஆகியன செய்ய முதல் படியாக, பெயர்ச்சொற்களைத் தொகுக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம்.

முதல் பணியாக peyar.in தளத்தில் உள்ள குழந்தைப் பெயர்களைத் தொகுத்துள்ளேன்.
பட்டியலை இங்கே காணலாம்.
https://github.com/tshrinivasan/tamil-nouns

இதே போல, ஊர்ப்பெயர்கள், தாவரங்கள், விலங்குகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தொழிற்பெயர்கள் போன்றவற்றை சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த பெரிய பட்டியலை வளர்க்க உங்கள் அனைவரின் உதவியும் தேவை.

ஆர்வமுள்ளோர், உங்களுக்குத் தெரிந்த பெயர்ச்சொற்களை, வகை வாரியாகப் பிரித்து, ஒரு உரை ஆவணத்தில் எழுதி எனக்கு ( tshrinivasan@gmail.com ) அனுப்ப வேண்டுகிறேன்.

மிக்க நன்றி.

Monday, March 09, 2015

தமிழ் கற்பிக்க ஒரு செயலி தேவை




திரு. பொள்ளாச்சி நசன் அவர்கள் தமிழ் கற்பிக்க ஒரு எளிய முறையை உருவாக்கியுள்ளார்.

அவர் கூற்றுப்படி,

"மாணவர்கள் எந்த அகவையினராக இருந்தாலும் சரி, தமிழ் கற்றுக் கொண்டதில் எந்த நிலையினராக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் படிப்பதற்காக ஒதுக்கினால், 30 நாள்களில் யாரை வேண்டுமானாலும் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கக்கூடியவராக, மாற்ற முடியும்."


இங்கிலாந்தில் உள்ள நியூகாசில் கல்விக் கழகத்தினர், http://newcastletamilacademy.uk/
இந்த முறையைப் பின்பற்றி, மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து வருகின்றனர்.
பாரம்பரிய முறையைவிட, இந்த புதிய கல்விமுறை, மாணவர்களுக்கு எளிதாகவும், ஆர்வமூட்டும் வகையிலும் உள்ளதை ஆமோதிக்கின்றனர்.

இம்முறையின் சிறப்புகளை இங்கே காண்க.
http://win.tamilnool.net/sound/sutty.pdf   

32 அட்டைகள் மூலம் மிகமிக எளிய முறையில் தமிழ் கற்பிக்கும் முயற்சி இது.

இந்த 32 அட்டை/பாடங்களை இங்கே பெறலாம்.
http://www.thamizham.net/kal/ttenglish/cards32-u8.htm

இவற்றை இணைய வழியில் ஒலிக்குறிகப்புகளோடும், எழுதும் முறையோடும் இங்கே கற்கலாம்.
http://www.thamizham.net/kal/ttenglish/index-u8.htm
http://win.tamilnool.net/sound/uuu/uuu.htm

இந்த பாடங்களுக்கு இன்னும் சுவையூட்ட, இவற்றை ஆன்டிராய்டு, ஐஓஎஸ் செயலிகளாக மாற்றலாம்.
நிறைய வண்ணங்கள், ஒலிக்குறிப்புகள், பயிற்சிகள், சோதனைகள், அசைவூட்டங்கள் சேர்க்கலாம்.

பெற்றோர்களும், குழந்தைகளும் நவீன தொழில்நுட்கங்கள் வழியே தமிழ் கற்பது மிக இனிமையாக இருக்கும்.

கட்டற்ற / திறமூல மென்பொருட்களாக இந்த செயலிகளை உருவாக்க ஆர்வம் கொண்டோர் tshrinivasan@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புக.


தமிழை அடுத்த தலைழுறைக்கு எடுத்துச் செல்ல, நம்மால் ஆன முயற்சிகளைச் செய்வோமே!

மிக்க நன்றி

Thursday, May 29, 2014

மலேசிய பயணம் - கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு

உத்தமம் மலேசியக் கிளை நடத்தும் 'கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு' நிகழ்வில் பேசுவதற்காக நாளை மலேசியா செல்கிறேன்.

நண்பர்கள் ரவி மற்றும் அருணுடன் இணைந்து பேசுகிறேன்.

அழைப்பிதழ் இதோ.

 31-05-2014 முதல் 05-0602014 வரை மலேசியாவில் இருப்பேன்.
அங்கு இருக்கும் நண்பர்கள் சந்திக்க விரும்பினால் தொடர்பு கொள்க.