Showing posts with label epub. Show all posts
Showing posts with label epub. Show all posts

Monday, May 12, 2014

Blog 2 Ebook - வலைப் பதிவை மின்னூலாக மாற்றுங்கள்

FreeTamilEbooks.com திட்டத்திற்கு மின்னூலாக்கம் செய்வது பெரும்பாலும் wordpress.com, blogspot.com தளங்களில் இருந்து நகல் எடுத்து pressbooks.com தளத்தில் ஒட்டும் வேலையே.

சுலபம் எனினும் தொடர்ந்து செய்வது சோர்வு தரும்.

இந்த வேலையை எளிமையாக்க ஒரு மென்பொருள் திட்ட தேவையை இங்கே எழுதினேன்.
http://goinggnu.wordpress.com/2014/05/01/project-idea-blog-to-ebook-converter/

இரு வாரங்களுக்கு முன் சென்னையில் Indix என்ற நிறுவனத்தில் 'கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் இரவு' ( HackNight ) நடந்த்து.
அதில் கலந்து கொண்டு, எனது தேவையை கூறினேன்.

தம்பிகள்  சத்யா மற்றும் ராஜ் இணைந்து, இந்த மென்பொருளை உருவாக்கத் தொடங்கினர்.

ஒரே இரவில் உருவாக்கி விட்டனர்.

காலையில் சோதனை ஓட்டத்திற்குப் பின், மேலும் பல மேம்பாடுகளை கூறினேன்.
அவற்றை எல்லாம் நிறைவேற்றி, பொதுப் பயன்பாட்டிற்காய் வெளியிட்டுள்ளனர்.

http://blog2ebook.sathia.me

இங்கே சென்று உங்கள் வலைத்தளங்களை மின்னூலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மூல நிரல் இங்கே - https://github.com/sathia27/blog2ebook


பயன் படுத்தி விட்டு, உங்கள் கருத்துகளையும் தேவைகளையும் எங்களுக்கு எழுதுங்கள்.

ரூபி ஆன் ரெயில்ஸ் நுட்பம் அறிந்தோர் நிரல் கொடை அளித்தும் உதவலாம்.

நன்றி.


தொடர்பு;

சத்யா - sathia2704@gmail.com
ராஜ் - rajanand@fsftn.org
ஸ்ரீனி - tshrinivasan@gmail.com