படம் மூலம் -
http://freetamilebooks.com/authors/ஏற்காடு-இளங்கோ/
இங்கு இதுவரை வெளியான 17 மின்னூல்களையும் இலவசமாகப் பெறலாம்.
இவர் தற்போது, ஏற்காடு மலைகளில் உள்ள பல்வேறு தாவரங்களை படம் எடுத்து, விக்கிமீடியா காமன்ஸ் எனும் தளத்தில் பதிவேற்றி வருகிறார்.
விக்கிபீடியாவின் துணைத்திட்டமான https://commons.wikimedia.org ல் உள்ள படங்களை யாவரும் எந்த வகையிலும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
[மூலம் - படத்தின் இணைய முகவரி] என்று சொன்னால் போதும்.
இந்த தளத்தில் சுமார் 5000 படங்களை ஏற்றியுள்ளார் திரு. ஏற்காடு இளங்கோ.
தாவரங்களின் அறிவியல் பெயர் மற்றும் பிற விவரங்களையும் சேர்த்து வருகிறார்.
இவை தாவரவியல் ஆராய்ச்சிக்கு பெரிதும் பயன்படுவன.
இவரின் புகைப்படப் பங்களிப்புகள் - https://commons.wikimedia.org/wiki/Category:Files_by_User:Yercaud-elango
பிற விவரங்கள் -
https://ta.wikipedia.org/s/3pgz
http://www.vallamai.com/?p=53227
இவரது புகைப்படப் பங்களிப்புகளுக்கு இன்னும் சிறப்பு செய்ய, திறம் மிகு புகைப்படக்கருவி தேவைப்படுகிறது.
அவரது வேண்டுகோள் இதோ.
====================================
வணக்கம். நான் இதுவரை 5000புகைப்படங்களை விக்கிமீடியாவில் இணைத்துள்ளேன். இதில் தாவர இனங்களின் புகைப்படங்கள், விலங்குகள், வண்ணத்துப் பூச்சிகள், ஏற்காடு சுற்றுலா தளங்கள் என இணைத்துள்ளேன்.
தாவரங்களின் பெயர்களை அடையாளம் கண்டுபிடித்து அதற்கு தாவரவியல் பெயரிடுவது மிகவும் சிரமம். சுமார் 30 நிமிடம் முதல் சில நாட்கள், சில மாதங்கள் கூட ஆகும். அலுவலக வேலை, தமிழ்நாடு அறிவியல் இயக்க பணிகள், அறிவியல் புத்தகம் எழுதும் பணி என பல வேலைகளுக்கு இடையே இப்பணியை நவம்பர் 22, 2014 முதல் செய்து வருகிறேன்.
தாவரம், மரம் போன்றவற்றை புகைப்படம் எடுக்க ஏற்காடு மலையில் 50 கி.மீ. தூரம் வரை செல்ல வேண்டும். மலையின் மீது ஏற வேண்டும். இது ஆபத்தான வேலை. இருப்பினும் சமூக நோக்கத்துடன் மாணவர் சமூகத்திற்காக, ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவுவதற்காக இப்பணியை செய்து வருகிறேன். 5 ஆண்டுகள்
செய்ய கூடிய பி.எச்.டி., ஆய்வுக்கு இணையான பணியாகும். 75 புத்தகங்களை எழுதி முடித்து விட்டு, எழுத்துப் பணியையும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
இத்துடன் தாவரங்களின் படங்களை எடுத்து இணைக்கும் பணியிலும் ஈடுபடுகிறேன். மரத்தின் உச்சியில் உள்ள பூக்களை படம் எடுக்க வேண்டி இருக்கிறது. ஒரு அதி நவீன கேமரா இருந்தால் மரங்களின் உச்சியில் உள்ள பூக்களை படம் எடுக்க முடியும். மேலும் ஏற்காட்டில் வாழும் பறவைகள், விலங்குகளையும் புகைப்படம் எடுத்து விக்கிமீடியாவில் இணைக்க முடியும். சமூக நோக்கத்துடன் எதிர்கால மாணவர் சமூகத்திற்காக செய்ய இருக்கும் இப்பணிக்கு 25க்கும் மேற்பட்ட Mega Pixel மற்றும் 30 x Zoom கொண்ட கேமரா வாங்கிக் கொடுத்தால் பணி சிறப்பாக அமையும்.
ஏற்காடு இளங்கோ
yercaudelango@gmail.com
====================================
இவ்வாறு ஏற்காடு மற்றும் தமிழகத்தின் பிற காடுகளின் தாவரங்களை புகைப்படம் எடுத்து, வகைப்படுத்தி, ஆவணப்படுத்தும் பெரும்பணி, மற்றொரு முறை எப்போது நடக்கும் என்று தெரியாது. முதல்முறையிலேயே, நல்ல கருவியில் புகைப்படம்
எடுத்துவிட்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அவருடைய புகைப்படக் கருவியும் தற்போது பழுதாகி விட்டது. அவரது பணிகளை ஊக்கப் படுத்தும் வகையிலும், விக்கிப் பீடியாவிற்கு தரமான படங்களை அளிக்க உதவும் வகையிலும்
ஏற்காடு இளங்கோ அவர்களுக்கு, ஒரு நல்ல புகைப்படக்கருவி வாங்கித்தர நன்கொடை வேண்டுகிறேன்.
நன்கொடையின் அளவிற்கேற்ப DSLR அல்லது 30x zoom Point and Shoot புகைப்படக் கருவியை வாங்கலாம்.
கீழுள்ள எனது வங்கிக் கணக்கிற்கு தங்களால் இயன்ற தொகையை அனுப்பினால் போதும்.
அவரது மின்னஞ்சல் முகவரிக்கும், எனது மின்னஞ்சல் முகவரிக்கும் நன்கொடை பற்றி எழுதிடவும் வேண்டுகிறேன்.
yercaudelango@gmail.com & tshrinivasan@gmail.com
வங்கிக் கணக்கு விவரங்கள் -
T Shrinivasan
Account No:
006010101471083
Axis bank
Mylapore Branch
Chennai
IFSC code UTIB0000006
மிக்க நன்றி!
No comments:
Post a Comment