இன்று நளாஸ் ஆப்பக்கடையில் சாப்பிடச் சென்றோம். அங்கு எங்குமே தமிழ் காணப்படவில்லை. எங்கும் ஆங்கிலம் மட்டுமே. உணவுப் பட்டியல் உட்பட.
அங்குருந்த 'பார்வையாளர் குறுப்பேட்டில்' கோரிக்கை விடுத்துள்ளேன்.
தமிழில் உணவுப் பட்டியல் கேட்டு நான் எழுதிய கோரிக்கை.
இது போல நீங்களும் கேட்கலாமே.
உணவுப் பட்டியல் தமிழில் எப்போது அச்சிட்டு வெளியிடுவார்கள் என்று தெரியவில்லை.
ஏன் தமிழில் பட்டியல் இல்லை என்று அங்கிருந்த பணியாளரிடம் பேசியபோது,
'இதுவரை வெகு சிலரே கேட்டுள்ளனர். ஆனால் பலரும் கேட்டால் நிச்சயம் செய்வோம்.' என்றார்.
நான் கேட்கத் தொடங்கிவிட்டேன். இனி எங்கும் தமிழில் தகவல்கள் கேட்பேன்.
நீங்களும் கேட்டுப் பாருங்களேன். பெரும் மாற்றங்கள் நம்மைப் போன்ற சாதாரண மனிதரிடமிருந்துதானே துவங்கும்.