Tuesday, December 09, 2025

டொரோண்டோ தமிழ்ப் புத்தக அரங்கம் 2025

புத்தகம் 

தமிழ்நாட்டில் புத்தகங்களோடு வளர்த்த எனக்கு, புத்தகக் கண்காட்சிகளே பெரும் திருவிழாக்கள். சென்னையின் புத்தகத் திருவிழாக்களின் போது, அங்கேயே தங்கிவிடலாம் எனும் அளவுக்கு பேராசை இருக்கும். புத்தகங்களை வாங்குவது, அவற்றின் வாசம் நுகர்வது, எழுத்துகள் காட்டும் தனி உலகில் தனியே சஞ்சரித்து மகிழ்வது போன்ற பல்வேறு வியாதிகள் எனக்கு உண்டு. 'டம்மி வாசகன்' என்று புது கல்யாண குணங்களும் சேர்ந்து விடுகிறது.

சிலருக்கு சினிமா. சிலருக்கு கிரிக்கெட். சிலபேருக்கு கோயில். எனக்கு புத்தகம்.

கனடாவில் தமிழ்ப் புத்தக கண்காட்சி

மூன்று ஆண்டுகளுக்கு முன் கனடா வந்த பின், இங்கு அதிகம் கிடைக்காமல் போனவை புத்தகங்களே. இறக்குமதி செலவும் அதிகம். யாராவது சென்னையில் இருந்து வந்தால், தம்பி சுரேஷ் மூலம் நூல்கள் வாங்கி, அனுப்பும் வைபவமும் நடக்கும்.

கிண்டில், கோபோ, இங்குள்ள நூலகங்கள் மூன்றுமே பெரு வரம். இருந்தாலும், 'ஆடின காலும், பாடின வாயும்' போல, புத்தகம் வாங்கிய கையும். ஸ்கார்புரோ நகர் என்பது கனடாவின் மதுரை. பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் மூலம், நாளொரு புத்தக வெளியீடும், பொழுதொரு இலக்கிய சந்திப்பும் நிறைந்த ஊர் இது. இங்கு வாழும் இலங்கைத் தமிழர்கள் தமிழை வளர்த்து வருகின்றனர். மொழிக்கான அவர்கள் தரும் உழைப்பு, நேரம், பொருள் பெரிதும் வியப்பு அளிப்பது. 

அவ்வப்போது, சில புத்தக விற்பனையாளர்கள் இங்கு கண்காட்சி நடத்துவர். என் வீட்டில் இருந்து வெகு தூரம். எனவே சில அரிதான நிகழ்வுகளுக்கே செல்ல முடிந்தது.

https://torontotamilbookfair.com/wp-content/uploads/2025/11/Toronto-Tamil-Book-Fair.png 

நல்வாய்ப்பாக, இந்த ஆண்டு 6,7 டிசம்பர் 2025  இருநாட்கள் நடந்த கண்காட்சியில் கலந்து கொள்ள முடிந்தது. காரின் சாரதியாக நித்யா இருக்கையில், எனது வேலை இருக்கையில் அமர்ந்து போக வேண்டிய இடத்தின் பெயர் சொல்வது மட்டுமே. ஐவரும் இருநாட்களும் திருவிழாவில் கலந்து கொண்டோம்.
 

டொரோண்டோ தமிழ்ப் புத்தக அரங்கம் 2025

கனடியத் தமிழர் பேரவை (CTC) மற்றும் ஐக்கிய இலங்கை முஸ்லிம் பேரவை – கனடா (USLMCC) இணைந்து மதம், இனப்பாகுபாடு, பின்னணி, வேறுபட்ட நம்பிக்கைகளைத் தாண்டி தமிழ்மொழியை ஒன்றுபட்ட உணர்வுடன் நடத்திய திருவிழாவில், 20 சிற்றரங்குகள், ஒரு பெரிய மேடையுடன் கூடிய பேச்சரங்கு. மேடையில் புத்தக வெளியீடுகள், நூல் அறிமுக உரைகள், கலை நிகழ்ச்சிகள், பாடல்கள், நாடகம், வில்லுப்பாட்டு என்று விழா களைகட்டியது.

நிகழ்வில், யாரைப் பார்த்தாலும், ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ, பதிப்பாளராகவோ, நூல் விமர்சகராகவோ, ஆராய்ச்சியாளராகவோ இருந்தது பேரனுபவம். அறிஞர்கள் நிறைந்த அவை.

பல வகை நூல்களை ஒரே இடத்தில் பார்த்து, பூந்தோட்டத்தில் சிக்கிய வண்டு போல மயங்கிக் கிடந்தேன். மகன் வியன் ஒரு புறம் நூல்களை வாங்கி அடுக்க, இயல், பாரி இருவரும் சிறார் நூல்களை அள்ள, சென்னையின் புத்தகத் திருவிழா நாட்களை மீண்டும் வாழத்தொடங்கினேன்.

பழைய நண்பர்கள், புது நண்பர்கள், பல காலம் பெயர் அறிந்து நேரில் கண்டவர்கள் என பலரையும் ஒருங்கே கண்டது இனிமை.

ஒரே சிக்கல் தான் இப்போது எனக்கு. அடுத்த நூல்கள் வாங்கும் முன் இருப்பவற்றை படித்து விட வேண்டும். இது நித்யாவின் கட்டளை. கட்டளையே சாசனம்.

உறவுகளையும் உடன் வளர்ந்த நட்புகளையும் விட்டு வெகு தூரம் இருந்தாலும், தமிழ் நூல்கள் நிரம்பிய சூழல் மட்டுமே மகிழ்ச்சியும் நிறைவும் தருகிறது.
வீட்டின் புத்தக அலமாரிகள் நிரப்பி, எங்கள் அடுக்ககத்தின் பொதுவான ஒரு அறையின் அலமாரிகளிலும் புத்தகங்களை நிரப்பி வருகிறேன். புத்தகங்கள் சூழ வாழ்தல் இனிது. அவற்றை தினமும் படிப்பதே அதனினும் இனிது என்கிறார் நித்யா.

பார்ப்போம். அனைத்தையும் படிப்பது இலட்சியம். பாதியாவது முடிப்பது நிச்சயம்.

திருவிழாவில் குறளங்காடி, ஐபாட்டி, வடலி சிற்றரங்குகளில் தமிழ் கற்கும் விளையாட்டுகளை வாங்கினோம். இயல், பாரி உடனான குளிர்கால சிறார் விளையாட்டுகள் இனி தமிழோடு. 


எழுத்துல சூப்பர் ஸ்டார் அ. முத்துலிங்கம் அவர்களது 70 ஆண்டுகால எழுத்து, படைப்பு பணி குறித்துப் பேசும் ஒரு சிறப்பு நூல் -   "அ.முத்துலிங்கத்தின் எழுத்துலகு" வெளியிடப்பட்டது. மேடைக்கு சென்று நூலைப் பெற்றுக் கொண்டது இனிய அனுபவம். வாய்ப்பு அளித்த பேராசிரியர் இரா. செல்வகுமார், எழுநா முரளிதரன் ஆகியோருக்கு நன்றிகள்.


வரும் போது எங்களோடு காரில் வர இசைந்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி. அவரது சிறப்புரை சிறப்பு. பொதுவான உரையாடல்களிலும் அவரது எளிமையும் இனிமையும் ஆச்சரியம் தந்தன. எனது நூல்கள், நூலகம் சார்ந்த கனவுகளையும் புலம்பல்களையும் சிரித்துக் கொண்டே கேட்டு வந்தார்.

நண்பர்கள் சுகந்தன், ஐஸ்வர்யா, சாய்ராம், நூலகம் அறக்கட்டளை நண்பர்கள், காலம் செல்வம், வெங்கட் வெங்கட்ரங்கன், இளங்கோ, மாலினி, மார்கெரட், எழுநா முரளிதரன், பிரபு, சிவன் இளங்கோ, அகணி சுரேஸ், ரூபன் ஆகியோரைக் கண்டு பேசிய தருணங்கள் மகிழ்வானவை.


முதல் முறையாக புத்தகம் வெளியிட்ட துளிர் எழுத்தாளர்கள், முதல் முறையாக கடை விரித்த விற்பனையாளர்கள், முதல் முறையாக புத்தகத் திருவிழா வந்த சிறார்கள், பேரனுபவம் மிக்கோர் என பலருக்கும் பேரனுபவங்களை தந்திருக்கும் இந்தத் திருவிழா.

சிறியவர்களும் பெரியவர்களுமாக புத்தகங்களைத் தேடித்தேடி எடுத்து வாங்குவதைக் காண்பது பெரு மகிழ்ச்சி.

            




உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

என்பதை நேரில் அனைவரும் உணர்ந்தோம்.

பல்வேறு பெரும் பணிகளுக்கு இடையே, பல மாதங்கள் திட்டமிட்டு, சிறப்பாக நிகழ்வை நடத்திய விழாக்குழுவினருக்கு பல்லாயிரம் நன்றிகள். தொடர்ந்து ஆண்டுதோறும் இது போன்ற புத்தக திருவிழாக்களை நடத்தி வர வேண்டுகிறேன்.

பல ஆண்டுகளாக கலந்து கொள்ளும் புத்தகத் திருவிழாவில் அப்படி என்னதான் கிடைக்கிறது என்று யோசிக்கிறேன். நமக்கு இருக்கும் ஒரு அதீத கிறுக்குத்தனம், பலருக்கும் இருப்பதை அறிவதும், அவர்களை ஒரே இடத்தில் காண்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியும்தான் கிடைக்கிறது.

கண்ணில் காணும் எழுத்துகள், மூளைக்குள் நடத்தும் மாயாஜாலங்களை அனுபவிப்பது பேரின்பம். அது போதும் இப்பிறவிக்கு.


படங்களும் காணொளிகளும்

நான் சுட்ட படங்கள்

https://photos.app.goo.gl/QPHDeBNFZEbqipEt9


தொடக்க விழாத் தருணங்கள் -  ஐயா புகைப்படக் குழு
https://iyah4u.smugmug.com/PublicEvents/2025Events/6-Dec-2025-Toronto-Tamil-Book-Fair-2025/i-smR6VMT


நடந்தவையும் நடக்கபோகின்றவையும்
https://www.youtube.com/watch?v=SrEydO8JDTQ

தமிழ் முன்னோடி தமிழேந்தி அப்பாவின் கனவு | தூய தமிழ் பெயர்கள் 
https://www.youtube.com/watch?v=3CmI0utJfPg


Friday, June 30, 2023

யதி - வாசிப்பு அனுபவம்



பா.ராகவன் எழுதிய துறவு உலகம் இந்த 1000+ பக்க நூல்.

கனடாவில் உள்ள நூலகத்தில் இந்த நூல் கிடைத்தது பெரு மகிழ்ச்சி. ஆனால் ஆயிரம் பக்க நூலைப் படிப்பது எனக்கு சாத்தியமா என்ற ஐயம் எழாமல் இல்லை. ஏற்கெனவே கிண்டிலில் இந்த நூலை வாங்கியிருந்தாலும், பெரிய நூல்களைப் படிப்பதில் பெரும் சுணக்கம் தற்போது. சிறுகதைகள், குறுங்கதைகள் என சுருங்கி, ஒரு நிமிட குறுங்காணொளிகளில் மனம் நின்றுபோய் ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.

இருந்தாலும், நூலகத்தில் இருந்து எடுத்து மேசை மேல் இருக்கும் நூலைப் பார்க்கும் போதெல்லாம், வேள்பாரி படிக்கும் காலங்களில், அதிலேயே மூழ்கிப் போய், சாலையெங்கும் சிரித்துக் கொண்டே வண்டி ஓட்டியதும், பணிகளில் மனம் ஒட்டாமல் கஷ்டப் பட்டதும் நினைவுக்கு வந்தது. இருக்கட்டும். இதையும் படிப்போம் என்று ஆரம்பித்தேன்.

பா.ராகவன், அவரது ஒரு கதாப்பாத்திரம் சொல்வது போல, ஒரு மொழியின் குழந்தை. அவரை நேரில் பார்த்தால் குழந்தை மனம் கொண்டிருப்பவர் போல இருப்பார். எழுத ஆரம்பித்தால் இராட்சராக, பேயாக, பூதமாக மாறி விடுவார் போல.

ஒரு மாய உலகைப் படைக்க, இக்காலத்தில் பல நாட்கள் தொடரும் நெடுந்தொடர், இணையத் தொடர், திரைப்படம் வேண்டியுள்ளது. ஆனால், இவரோ வெறும் வார்த்தைகளில் ஒரு பேருலகைப் படைக்கிறார். வார்த்தைகள் அவரது விரல் பட்டு புது உலகைப் படைத்து விடுகின்றன.

எந்த பெரு நாவலிலும் வரும் அதிர்ச்சிகள், நகைச்சுவைகள், இதிலும் உண்டு. கதை என்னவோ துறவறம் பூண்ட ஒரே குடும்பத்தின் நான்கு சகோதரர்கள் பற்றித்தான். ஆனால், அன்பும், பாசமும், வேட்கையும், காதலும் எல்லாமே துறவின் பல்வேறு நிலைகள் என்றே உணர்வோம்.

இந்தியாவில் துறவு பல காலமாகவே இயல்பான ஒன்று. ஆனால்,
துறவு நேரிடும் வீட்டில் ஏற்படும் துயர் வாழ்நாள் முழுதும் நீடிக்கும் ஒன்று. விட்டு ஓடியவருக்கு உலகமே வீடுதான். வீட்டில் உள்ளோருக்கு என்றும் துயரே. ஆயினும் நடப்பதை ஏற்பதே வாழ்வு.

நான்கு சகோதர துறவிகளுள் ஒருவரின் சுயசரிதை போல் விரியும் நாவல், முதல் பக்கத்திலேயே நம்மையும் அவர்கள் வாழ்வுக்குள் இழுத்து விடுகிறது.

தேன் உண்ணும் தேனி பூவில் மயங்கிக் கிடப்பது போல, வார்த்தைகள் விரிக்கும் வாழ்வில் மயங்கி விடுவோம். திடீர்த் திருப்பங்கள், சித்து வேலைகள், பேய்கள், பல்வேறு சித்தர்கள், அரசியல் வாதிகள், கொலைகள், மரணம் என பல்வேறு உலகங்களில் வாழ்ந்து விட்டு வரலாம்.

பெரிதாக மதக் கருத்துகள், போதனைகள், பரப்புரைகள் ஏதுமில்லாதது வியப்பு. துறவிகளின் கதைகள், பெரும்பாலும் கடவுள் பக்தி, ஆன்மிகம், சித்து வேலைகளின் மீதான பிரமிப்பை ஏற்படுத்தும். ஆனால் யதி, துறவிகளின் உலகை அருகே சென்று காட்டி, வாழ்வின் அபத்தங்களையும் ருசியையும் சுவைக்கச் செய்கிறது.

ஒரு நிமிட குறுங்காணொளிகளில் சிக்கியிருந்த காலத்தில், இப் பெருநாவல் படிக்கும் பேரனுபவம் மிக இனிது. புதுப்புது திருப்பங்கள், எதையும் சாத்தியப் படுத்தும் சித்து வேலைகள், அறிவியலுக்கு முற்றிலும் எதிரான நிகழ்வுகள் என நிஜ உலகையும் மாயங்களையும் பிணைந்து பல்வேறு வாழ்வுகள் வாழ்ந்த அனுபவம் கிட்டுகிறது.

அடுத்த முறை ஒரு துறவியை காணும் போது, அவர் மேலிருக்கும் பிரமிப்பு நீங்கி, அவரது துறவு நோக்கம் நிறைவேற வாழ்த்துவோம்.

துறவறம் கிட்டாமல் போய், பின் எழுத்தாளராக மாறியதாக பா.ராகவன் எழுதியுள்ளார். எனக்கென்னவோ அவர் எழுத்துப்பணியே அவரை துறவியாகத்தான் வாழ வைத்திருக்கிறது. என்ன அதை அவர் கர்மயோகம் என்பார்.

தன் எழுத்து வேலையின் மீது தீராக் காதல் கொண்டு, அதன் பலன்களை வாசகர்களுக்கு தாரை வார்த்து விடும் யோகியாகவே அவரைக் காண்கிறேன்.

தமிழில் ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கும் அதிசயப் பூ இந்த யதி.
படிக்கத் தவறாதீர்.



Friday, January 20, 2023

கிண்டில் அன்லிமிடட் திட்டத்தில் கிடைக்கும் சிறார் இலக்கிய மின்னூல்கள்

 

தமிழில் குழுந்தைகளுக்கான மின்னூல்கள் அதிகரித்து வருவது பெருமகிழ்ச்சி.

அச்சு நூல்கள் வாங்குவதில் உள்ள சிக்கல்கள் பல. அதிகரித்து வரும் விலை, புத்தகக் கடைகள் வீட்டில் அருகில் இல்லாமல் போதல், வண்ணமயமான சிறார் புத்தகங்கள், இதழ்கள் குறைவு போன்ற பல காரணங்கள். ஆயினும் அறிவியல் முன்னேற்றங்கள் குழந்தைகளுக்கான படைப்புகளை எவரும் எளிதில் வெளியிடும் வகையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளன.


இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் படைப்பாக "E-ink" திரை கொண்ட மின்னூல் படிப்பான கருவிகளை சொல்வேன். அவற்றில் அமேசான் நிறுவனம் வழங்களும் கிண்டில் கருவியும், அமேசான் தளத்தில் உள்ள மின்னூல் கிடங்கும் மிகச் சிறந்தவை.


தமிழில் பலரும் சிறார் இலக்கியங்கள் படைத்து, அவற்றை மின்னூலாக கிண்டில் சந்தையில் விற்கின்றனர். அவை அனைத்தையும் விலை கொடுத்து வாங்க இயலாது.  அதற்காகவே "Kindle Unlimited" வசதியை வழங்குகிறது. இதன் மூலம் மாதம் சுமார் ரு. 170 வாடகை தந்து "Kindle Unlimited", திட்டத்தில் இணைந்துள்ள மின்னூல்களை படிக்கலாம். அவற்றை விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை. ஆனால், ஒரு நேரத்தில் பத்து நூல்களை மட்டுமே வாடகைக்கு பெற இயலும்.  புது நூல் ஒன்று தேவையெனில், பழைய நூல் ஒன்றை திருப்பித் தர வேண்டும்.

இம்முறை மூலம், "Kindle Unlimited" திட்டத்தில் கிடைக்கும் அனைத்து நூல்களையும் படித்து மகிழலாம்.


மின்னூல்களைப் படிக்க 'கிண்டில்' கருவி சிறந்தது. கண்களை உறுத்தாது. அச்சு நூல் போலவே படிக்க எளிது, எங்கும் எடுத்துச் செல்லலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒரு மாதம் படிக்கலாம். 

200-300 மின்னூல்களை எளிதாக சேமி்க்கலாம். அமேசானில் வாங்கும் மின்னூல்கள் இதில் தானாகவே வந்து இறங்கி விடும். (இணையத்தில் இணைக்க வேண்டும்). 

https://FreeTamilEbooks.com ல் நாங்கள் இலவசமாக வெளியிடும் மின்னூல்களை,  mobi கோப்புகளை, கிண்டில் கருவியில் படிக்கலாம்.

இங்கே, "Kindle Unlimited" திட்டத்தில் கிடைக்கும் சிறார் இலக்கிய மின்னூல்களைத் தொகுத்து வருகிறேன். நீங்களும் படித்து, உங்கள் குழந்தைகளுக்கும் படிக்க வழங்குங்கள்.


வாங்கித் தரும் அச்சு நூல்களை எல்லாம் கடகடவெனப் படித்து விட்டு, அடுத்து, அடுத்து என்று கேட்டும் மகன் வியன் தற்போது, கிண்டில் கருவியில் மின்னூல்களைப் படிக்கத் தொடங்கியதால், பெரு மகிழ்ச்சி.

 

கிண்டில் தளத்தில் மின்னூல்களை வெளியிடும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றி.


இந்த இணைப்பில் உள்ள சுரங்கத்தில் நீங்களும் தொடர்ந்து பார்த்து வாருங்கள். புதுப்புது புதையல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

https://www.amazon.in/s?i=digital-text&bbn=1637026031&rh=n%3A1571277031%2Cn%3A1634753031%2Cn%3A1637026031%2Cp_n_feature_three_browse-bin%3A10837941031%2Cp_n_feature_nineteen_browse-bin%3A4729244031&s=date-desc-rank&lo=image&dc&qid=1674233284&ref=sr_pg_1

 

1.

 Nursery Rhymes in Tamil for Kids (Tamil Edition)

Nursery Rhymes in Tamil for Kids (Tamil Edition)


2.


சிறுவர்களுக்கான முல்லா கதைகள் | Mulla Nasruddin Tamil Story Books for Kids (Tamil Edition)

சிறுவர்களுக்கான முல்லா கதைகள் | Mulla Nasruddin Tamil Story Books for Kids (Tamil Edition)

 

3.

மகாபாரதம் - Mahabaratham | Tamil Historical Novel (Tamil Edition)

 

4.

Corona virus: A Book for Children (Tamil) (Tamil Edition)

 

 5.

christian stories for kids in Tamil - Tamil Story Books for Kids (Tamil Edition)

christian stories for kids in Tamil - Tamil Story Books for Kids (Tamil Edition)  

6.

குழந்தைகளுக்கான அக்பர் மற்றும் பீர்பால் கதைகள் - Akbar and Birbal Stories in Tamil For Kids (Tamil Edition)

குழந்தைகளுக்கான அக்பர் மற்றும் பீர்பால் கதைகள் - Akbar and Birbal Stories in Tamil For Kids (Tamil Edition)  

7.


ஹுஹிட்டோ நீதிக்கதைகள் தமிழ் பதிப்பு தொகுதி.40: 不人寓話 (Tamil Edition)

 

8.

ஹுஹிட்டோ நீதிக்கதைகள் தமிழ் பதிப்பு தொகுதி.39: 不人寓話 (Tamil Edition)

 

9.

சிறார் நாடகம் (Tamil Edition)

சிறார் நாடகம் (Tamil Edition)

 

10.

விக்கிரமாதித்தன் கதைகள் - Vikramaditan stories - Tamil Story Books for Kids (Tamil Edition)

 

13.

பஞ்ச சந்திரக் கதைகள் - Panchatantra Tamil Story Book for Kids (படங்களுடன்) (Tamil Edition)

பஞ்ச சந்திரக் கதைகள் - Panchatantra Tamil Story Book for Kids (படங்களுடன்) (Tamil Edition)  

 

14.

நத்துவும் மித்துவும் : சிறுவர் நாவல் (வயது 6 முதல் 12 வரை) (Tamil Edition)

 

16.

சித்துவின் புதிய பயணம் : A bedtime story for everyone (Tamil Edition)

 

17.

அணில் திருமணம் : Picture Story Book (Tamil Edition)

 

18.

வேண்டுதல் (சிறுவர் கதை): VeNdudhal (A Short Story for Kids) (Tamil Edition)

வேண்டுதல் (சிறுவர் கதை): VeNdudhal (A Short Story for Kids) (Tamil Edition)

 

19.

கணினி, கணி நீ!: யாளி மறவரின் பயணம் 2 (யாளி மறவரின் சாகசப் பயணங்கள் (சிறுவர் கதை)) (Tamil Edition)

கணினி, கணி நீ!: யாளி மறவரின் பயணம் 2 (யாளி மறவரின் சாகசப் பயணங்கள் (சிறுவர் கதை)) (Tamil Edition)  

 

20.

வாஸ்கோ-ட-காமா / Vasco Da Gama: கடலில் மிதந்த புயற்பவை (Tamil Edition)

வாஸ்கோ-ட-காமா / Vasco Da Gama: கடலில் மிதந்த புயற்பவை (Tamil Edition)

 

21.

கோடை விளையாட்டு பாப்பா (Tamil Edition)

25.

சார்லஸ் டார்வின்: கடல் பயணங்களால் உருவெடுத்த மேதை (Tamil Edition)

 

26.

சோழத் தூதன்: யாளி மறவரின் பயணம் 1 (யாளி மறவரின் சாகசப் பயணங்கள் (சிறுவர் கதை)) (Tamil Edition)

சோழத் தூதன்: யாளி மறவரின் பயணம் 1 (யாளி மறவரின் சாகசப் பயணங்கள் (சிறுவர் கதை)) (Tamil Edition)

 

27.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்: Stories of success in life (Tamil Edition)

 

28.

யக்ஷியின் குழந்தைகளும் புன்னர பொம்மையும் The fairy babies and the cute doll: Picture story book (Tamil Edition)

 

29.

திப்பிலி ராணி கதைகள் (Tamil Edition)

 35.

முயல் குட்டி (Tamil Edition)

முயல் குட்டி (Tamil Edition)

 

36.

ஃபேன்டசி கதைகள்: Fantasy Stories (Tamil Edition)

ஃபேன்டசி கதைகள்: Fantasy Stories (Tamil Edition)

 

37.

கதை பாடல்கள் : குழந்தைகளுக்கான பாடல் வழி கதைகள் ! (Tamil Edition)

கதை பாடல்கள் : குழந்தைகளுக்கான பாடல் வழி கதைகள் ! (Tamil Edition)

 

38.

மாவீரன் பூலித்தேவன்: Pulidevan (Tamil Edition)

 

39.

சிறுவர் பாடல்கள் (Tamil Edition)

சிறுவர் பாடல்கள் (Tamil Edition)

 

40.

The best story book for children’s in Tamil I சிறுவர்களுக்கான சிறந்த கதைகள்: Children's Bedtime Moral Short Stories Book, ...

 

41.

Kitty The Dinosaur (Tamil Edition)

43.

பாதாள உலகின் இளவரசி (Tamil Edition)

 

44.

வறட்டுத்தவளையும் கான குயிலும்: சிறுவர் கதை (Tamil Edition)

 

45.

நெல் காய்க்கும் மரம்: Nell Kaikkum Maram (Tamil Edition)

 54.

சுட்டியானை - Chuttiyaanai: October 2020 (Chuttiyannai) (Tamil Edition)

 

55.

சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும்: Sindrellavum Innum Sila Kathaikalum (Tamil Edition)

 

56.

கெட்டிக்காரக் குட்டித் தவளை kettikaara kuttyth thavalai (Tamil Edition)

 

57.

நாய்க்கு உதவினால் தோட்டம்!: Stories for Muslim Children (Tamil Edition)

 60.

ஒரு ஊர்ல..: (சிறுமிகள், சிறுவர்களுக்கான அழகான குட்டிக் கதைகள்) (Tamil Edition)

 

61.

எலியும் சிங்கமும்: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் (Moral Stories Book 1) (Tamil Edition)

63.

Learn Tamil (தமிழ் பாடம்): அ முதல் ஃ வரை (Tamil Edition)

 

64.

ஒளிரும் தண்ணீர்: மிகை கற்பனைக் கதைகள் (Tamil Edition)

 

 65.

Field Trip to Keezhadi! : ஜெயா மாறன் சிறுவர் கதைத் தொகுப்பு - 1 (Tamil Edition)

Field Trip to Keezhadi! : ஜெயா மாறன் சிறுவர் கதைத் தொகுப்பு - 1 (Tamil Edition)

 

66.

குரங்கின் நூடுல்ஸ் ஆசை (Tamil Edition)

 

 

67.

சிறுவர் கைவண்ணம்: சிறுவர்கள் வரைந்த ஓவியங்கள் பாகம் 08 (Tamil Edition)

 

 

68.

பறவைகளைப் பார் (Tamil Edition)

பறவைகளைப் பார் (Tamil Edition)

 

69.

தூரன் சிறுவர் கதைகள் (Tamil Edition)

தூரன் சிறுவர் கதைகள் (Tamil Edition)

 

70.

அழ வள்ளியப்பா சிறுவர் கதைகள் (Tamil Edition)

அழ வள்ளியப்பா சிறுவர் கதைகள் (Tamil Edition)

 

71.

Birpal Stories | சிரி, சிந்தி பீர்பால் கதைகள்! (Tamil Edition)

 

72.

Unnaipol Oruvar (Tamil Edition)

 

73.

MAANAVA MAANAVIGALUKKANA NEETHIKADHAIGAL | மாணவ – மாணவிகளுக்கான நீதிக்கதைகள் (Tamil): Part 4 (Tamil Edition)

 

74.

Maanava Maanavigalukana Neethi Kathaigal | மாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் (Tamil): PART 2 (Tamil Edition)

 

75.

Manava - Manavigalukana Neethi Kathaigal | மாணவ – மாணவிகளுக்கான நீதிக்கதைகள் (Tamil): Part - 1 (Tamil Edition)

 86.

துப்பறியும் சுட்டிகள்: Thupariyum Chuttigal (Tamil Edition)

 

87.

ரோஹன் ரித்து மற்றும் மொபைல் கேம்ஸ் (Tamil Edition)

 

 88.

என் செல்லங்களே: #AnnaKidsStoryContest2020 (Tamil Edition)

 

89.

ராசுவின் யானைக் கதை: ராசுவின் யானைக் கதை (Tamil Edition)

 

90.

அலிபாபா: 40 திருடர்கள் (Tamil Edition)

 

91.

காட்டுவழிக் கதைகள் (Tamil Edition)

 

92.

ஏழு வள்ளல்கள் (Tamil Edition)

 

93.

"ஸ்மார்ட்" கிட்ஸ்: #AnnaKidsStoryContest2020 (Tamil Edition)

 

94.

ஜிங்காவோடு ஜாலியான 3 நாட்கள் (Tamil Edition)

 

 95.

"கலர் காக்காவோட குட்டி புஸ்வானம்": சிறுவர்களுக்கான நற்பண்புக் கதைகள் (Tamil Edition)

 

 

96.

பறக்கும் தட்டு Parakkum Thattu: சிறுவர் கதை (Tamil Edition)

 

97.

குகைதேசக் குள்ளர்கள்: சிறார் நாவல் (Tamil Edition)

 

98.

பென்குவினின் கதை (Tamil Edition)