மே 1, 2017 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழாவின் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம்.
நித்யா, தமது குழுவினருடன் கரகம், கொம்பாட்டம் ஆடினார்.
நித்யா, தமது குழுவினருடன் கரகம், கொம்பாட்டம் ஆடினார்.
பிறகு குழுவினரின் பறையிசை தொடங்கியது. இதன் துள்ளலிசைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. கேட்டும் எவரையும் ஆட வைத்து விடும்.
திடீரென
ஒரு முதியவர் மேடையில் ஏறினார். தன்னை மறந்து ஆடத் தொடங்கிவிட்டார்.
இரண்டு முறை தமது ஆட்டத்தை நிறுத்த முயன்றாலும், இசையின் தாக்கத்தால்
தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்.
கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்தது இந்த நடனமும் இசையும்.
அவரது நடனத்தின் காணொளி இதோ.
நமக்கெல்லாம், அவர் வயதில், உற்சாக நடனமாடும் மனமும் உடலும் வாய்க்கப் பெற்றாலே, பெரிய வரம்தான்.
அந்தப் பெரியவருக்கும், மாடம்பாக்கம் சுக்ரா நடனக்குழுவினருக்கும் நன்றி !