Thursday, May 29, 2014
Friday, May 23, 2014
Project Madurai மின்னூல்கள
ProjectMadurai தளத்தில் உள்ள அனைத்து நூல்களையும் epub, mobi, 6 inch PDF ஆக மாற்றும் திட்டம் உள்ளது.
http://projectmadurai.org/pmworks.html
தன்னார்வ தொண்டர்கள் தேவை.
ஆர்வமுள்ளோர் எம்மை அணுகவும்.
=======
மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? -
தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs
இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook
எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooks
Wednesday, May 21, 2014
பேராசிரியர் அரங்க இராமலிங்கம் - தமிழ் வளர்ச்சி மன்றம் - விழா
வணக்கம்.
தமிழ் வளர்ச்சி மன்றத்தின் 60 ஆவது ஆண்டு விழா மற்றும் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி
சுந்தரம் பிள்ளை 200 ஆம் ஆண்டு விழா ஆகிய இருவிழாக்களும் 22-05-2014 அன்று மாலை 5.
00 மணிக்கு வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
தாங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க
வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம்.
அழைப்பு இணைக்கப்பெற்றுள்ளது.
Friday, May 16, 2014
Chennai Events - சென்னை நிகழ்வுகளின் தொகுப்பு
சென்னை மாநகரம் பல நிகழ்வுகளின் துறைமுகமாகத் திகழ்கிறது.
சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்றாடம் பல பொது நிகழ்ச்சிகள் நடைபெறுகிறன. அவற்றுள் தொடர்நிரல் நிகழ்வுகள் (Hackathon), மென்பொருள் பயனர் குழுக்களின் சந்திப்புகள் (Software Users Group meetings), பயன்பாடு வெளியீடு (Product launch), துவக்க விழாக்கள் போன்ற கணினியாளர்களுக்கான தொழில்நுட்ப நிகழ்ச்சிகளும், பதிவர் சந்திப்பு, கீச்சர் சந்திப்பு (Tweetup), புகைப்பட பயிற்சி மற்றும் பயிலரங்குகளும் அடங்கும்.
இந்நிகழ்ச்சிகள் பற்றி வலைத்தளங்கள், பதிவுகள், முகநூல் நிகழ்வுகள் (Facebook Events), கூகிள் நிகழ்வுகள் (G+ Events), மற்றும் meetup.com, eventbrite.com போன்ற நிகழ்வு தளங்கள் ஆகியவை மூலம் அறிவிக்கப்படுகிறன. ஆனால், இவை அனைத்தையும் ஒருங்கே அறிவதற்கு இதுவரை எந்த இடமும் இல்லை.
சென்னையில் நடக்கும் இந்நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஓர் இடத்தில் வழங்குவதற்கான முயற்சியின் ஒரு படி தான் கூகிள் நாள்காட்டியில் வந்துள்ள Chennai Events என்னும் நிகழ்வுத் தொகுப்பு.
தன்னார்வலர்களின் குழு இந்த தொகுப்பினைப் புதுப்பிக்கும். கூகிள் நாள்காட்டியில் இந்த நிகழ்வுத் தொகுப்பு உள்ளதால், கீழ்காணும் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும்:
மின்னஞ்சல் அறிவிப்பு (Email Notification)
குறுஞ்செய்தி அறிவிப்பு (SMS Notification)
பல பயனர் ஆக்கம்
பிற நாள்காட்டிகளுடன் இணைத்தல்
எப்படி பெறுவது?
முகவரி : http://chennaieventscalendar.blogspot.in/
இணைப்புப் பொது முகவரி (Public iCal) (பிற நாள்காட்டிகளுடன் இணைப்பதற்கு) : https://www.google.com/calendar/ical/6ppkf92sp3one0i7al7inkahm8%40group.calendar.google.com/public/basic.ics
உங்களது கூகிள் நாள்காட்டியில் இணைக்க:
கூகிள் நாள்காட்டிக்குச் செல்லுங்கள் (http://calendar.google.com/ )
' Other calendars ' அருகில் உள்ள கீழ்நோக்கும் சுட்டியைச் சொடுக்குங்கள்.
அதில் 'Add by URL' என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
Public iCal முகவரியினை உள்ளிடுங்கள்.
அதன் பின், 'Add Calendar' ஐச் சொடுக்குங்கள்.
இப்போது, உங்கள் நாள்காட்டித் தொகுப்புகளில் "Other Calendars” கீழ் Chennai Events இருப்பதைக் காணலாம். தொகுப்பு ஓடை சரிவர இயங்க அதிகபட்சம் 8 மணிநேரம் வரை ஆகலாம்.
மின்னஞ்சல் \ குறுஞ்செய்தி அறிவிப்புகளைப் பெற, Remainders and Notifications பக்கம் போய், தேவையான அமைப்புகளைத் தேர்வு செய்துக் கொள்ளலாம்.
நீங்களும் பங்குபெற:
Chennai Events நிகழ்வுத் தொகுப்பில் பங்கு பெற விரும்புவோர் நண்பர் சீனிவாசன் அவர்களைத் ( tshrinivasan@gmail.com ) தொடர்புக் கொள்ளலாம்.

ஆக்கம்
-- அருண் arunpalaniappan.mek@gmail.comMonday, May 12, 2014
வியன்
எமது குட்டி இளவரசனுக்கு 'வியன்' என்று நற்றமிழில் பெயர் சூட்டியுள்ளோம். வியப்பானவன், பரந்த மனம் கொண்டவன் என்று பொருள்.
கதிர், நன்னன், புகழ், நிலவன், முகில், வெற்றி, நற்கோ, வளவன்,
அகரன், கவின், மாலன், செழியன், இனியன், பாரி, எழிலன் - யோசித்த பிற
பெயர்கள்.
peyar.in தளம் வெகு உதவியாக இருந்தது.
சிறப்பான பெயர்களை அறிமுகம் செய்த CR செல்வகுமார் ஐயாவிற்கும் நண்பர் பொற்கோ அவர்களுக்கும் நன்றிகள்.
Blog 2 Ebook - வலைப் பதிவை மின்னூலாக மாற்றுங்கள்
FreeTamilEbooks.com திட்டத்திற்கு மின்னூலாக்கம் செய்வது பெரும்பாலும் wordpress.com, blogspot.com தளங்களில் இருந்து நகல் எடுத்து pressbooks.com தளத்தில் ஒட்டும் வேலையே.
சுலபம் எனினும் தொடர்ந்து செய்வது சோர்வு தரும்.இந்த வேலையை எளிமையாக்க ஒரு மென்பொருள் திட்ட தேவையை இங்கே எழுதினேன்.
http://goinggnu.wordpress.com/
இரு வாரங்களுக்கு முன் சென்னையில் Indix என்ற நிறுவனத்தில் 'கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் இரவு' ( HackNight ) நடந்த்து.
அதில் கலந்து கொண்டு, எனது தேவையை கூறினேன்.
தம்பிகள் சத்யா மற்றும் ராஜ் இணைந்து, இந்த மென்பொருளை உருவாக்கத் தொடங்கினர்.
ஒரே இரவில் உருவாக்கி விட்டனர்.
காலையில் சோதனை ஓட்டத்திற்குப் பின், மேலும் பல மேம்பாடுகளை கூறினேன்.
அவற்றை எல்லாம் நிறைவேற்றி, பொதுப் பயன்பாட்டிற்காய் வெளியிட்டுள்ளனர்.
http://blog2ebook.sathia.me
இங்கே சென்று உங்கள் வலைத்தளங்களை மின்னூலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மூல நிரல் இங்கே - https://github.com/sathia27/
பயன் படுத்தி விட்டு, உங்கள் கருத்துகளையும் தேவைகளையும் எங்களுக்கு எழுதுங்கள்.
ரூபி ஆன் ரெயில்ஸ் நுட்பம் அறிந்தோர் நிரல் கொடை அளித்தும் உதவலாம்.
நன்றி.
தொடர்பு;
சத்யா - sathia2704@gmail.com
ராஜ் - rajanand@fsftn.org
ஸ்ரீனி - tshrinivasan@gmail.com
Labels:
blog,
blogger,
blogspot,
chennai,
ebook,
epub,
indix,
ror,
ruby,
rubyonrails,
tamil,
wordpress
Subscribe to:
Posts (Atom)